பீர்க்கங்காய் துவையலை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க நாக்கிலிருந்து சுவை நீங்கவே நீங்காது ..!

Advertisement

Peerkangai Thogayal Recipe in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். அதனால் அனைவருமே தங்களது தினசரி உணவில் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்ற பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Peerkangai Thogayal Brahmin Style in Tamil:

Peerkangai chutney recipe in tamil

முதலில் இந்த பீர்க்கங்காய் துவையல் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பீர்க்கங்காய் – 200 கிராம் 
  2. உளுந்து – 2 டீஸ்பூன் 
  3. கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் 
  4. காய்ந்த மிளகாய் – 2
  5. புளி – நெல்லிக்காய் அளவில் 
  6. பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் 
  7. தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன் 
  8. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  9. உப்பு – தேவையான அளவு  

ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் உளுந்து, 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய், நெல்லிக்காய் அளவில் புளி, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

பிறகு அதனை நன்கு குளிர விடுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 200 கிராம் பீர்க்கங்காயினை நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

செய்யும் பொழுதே சுவைக்க தூண்டும் பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி

ஸ்டேப் – 3

பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயினை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Peerkangai Thogayal Brahmin Style in Tamil

இப்பொழுது ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் முன்னரே வதக்கி வைத்துள்ள பொருட்கள் மற்றும் பீர்க்கங்காயினை சேர்த்து நன்கு அரைத்தால் நமது சுவையான பீர்க்கங்காய் துவையல் தயாராகிவிட்டது.

வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இந்த பீர்க்கங்காய் துவையலை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

வீட்டில் பீட்ரூட் சேமியா இருக்கா அப்போ இதை செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement