ஆரோக்கியத்தை வழங்கும் பிரண்டை சட்னி எளிமையாக செய்வது எப்படி?

Advertisement

பிரண்டை சட்னி

இட்டலி, தோசை என்றாலே சட்னி, சாம்பார், பொடி இவற்றில் ஏதவாது ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் உணவை சாப்பிட முடியும். தினமும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி என்று ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டால் சலித்து விடும். அதில் ஆரோக்கியம் கூட குறைவு தான். ஆரோக்கியம் நிறைந்த பிரண்டை சட்னி இட்டலி, தோசைக்கு மட்டும் இல்லாமல் சாதத்திற்கும் சிறந்த ஒன்றாக இருக்கும். பிரண்டையின் ஆரோக்கிய நன்மைகள் அதிகம். வாருங்கள் இன்று அரிப்பு தெரியாமல் சுவையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுவையான பிரண்டை சட்னி:

தேவையான பொருட்கள்:

பிரண்டை – 1 கப்
காய்ந்த மிளகாய் – 10
உளுத்தம் பருப்பு – ¼ கப்
புளி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு

செய்முறை:

முதலில் பிரண்டைகளை நார் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.

பின்னர் அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயை சிறிது சூடாக்கி அதில் மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டைகளை சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து பச்சை தன்மை நீங்கும் வரை வதக்கவும்.

வதக்கிய பின்னர் இவற்றை சிறிது நேரம் ஆறவைத்து, பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும். (தேவைப்பட்டால் புளியையும் வதக்கிக்கொள்ளலாம்)

பின்னர் ஒரு கடாயை சூடாக்கி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள துவையலை சேர்த்து இறக்கவும்.

இப்போது உடலுக்கு அதிக சக்தியை தரக்கூடிய பிரண்டை சட்னி ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement