Poondu Sadam Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.. தினமும் ஒரே வகையான லன்ச் செய்து போர் அடித்து விட்டதா.? அப்போ இன்றைக்கு 10 நிமிடத்தில் பூண்டு சாதம் செய்து அசத்துங்கள். பொதுவாக, ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு லன்ச் என்ன செய்வது என்பது மிகப்பெரிய குழப்பாக இருக்கும். இதனால் தினமும் ஒரே வகையான லன்ச் ரெசிபியை செய்து கொடுத்து வருவார்கள். இதனால், குழந்தைகள் அதிகம் சாப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் 10 நிமிடத்தில் சுவையான பூண்டு சாதம் செய்வது எப்படி.? என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Poondu Sadam Seivathu Eppadi:
தேவையான பொருட்கள்:
- வர மிளகாய் – 4
- பூண்டு – 20 பற்கள்
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- குடை மிளகாய் – 1 (சிறியது)
- கருவேப்பிலை – 2 கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் – 4 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
Poondu Sadam Seimurai:
ஸ்டேப் -1
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் குடை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பூண்டு பற்கள் மற்றும் வர மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில், கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -4
பிறகு, இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். அடுத்து, தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
தக்காளி வதங்கியதும் குடை மிளகாய், அரைத்து வைத்த பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
இறுதியாக, சாதத்தை சேர்த்து 2 நிமிடம் வரை நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான பூண்டு சாதம் தயார்.!
முட்டைக்கோஸ் சாதம் செய்முறை பார்க்க படத்தை கிளிக் செய்யவும்..👇
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |