பொரி கட்லெட் செய்முறை – Pori cutlet recipe in tamil
ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. மழை காலம் வேற ஆரம்பம் ஆகிட்டு.. இந்த மழை காலத்தில் மாலை நேரத்தில் ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் என்று தோற்றும். ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம் என்று யோசிப்போம். இருந்தாலும் என்ன ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுவது என்பதில் பல யோசனை இருக்கும். வெறும் 10 நிமிடத்தில் ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இங்கு பொரியை வைத்து மொறு மொறுன்னு ஒரு கட்லெட் ரெசிபி தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இரண்டு கப் பொரியில் கட்லெட் செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- பொரி – இரண்டு கப்
- பெரிய வெங்காயம் – ஓன்று பொடிதாக நறுக்கியது
- கொத்தமக்கல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு பொடிதாக நறுக்கியது
- பச்சை மிளகாய் – இரண்டு பொடிதாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
- சீரகம் பொடி – 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடலை மாவு – மூன்று ஸ்பூன்
- அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?
மொறு மொறு பொரி கட்லெட் செய்முறை:
ஒரு பவுலில் இரண்டு கப் பொரியை சேர்த்து அதனை ஒரு முறை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அவற்றில் பொரி முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் ஊறவைக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அதனை வடிகட்டி பொரியை தனியாக எடுத்து கொள்ளவும்.
பின் அந்த பொரியுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமக்கல்லி இலை சேர்த்து கிளறிவிடுங்கள்.
பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சீரகம் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறிவிடுங்கள்.
பின்பு அதனுடன் கடலை மாவு மூன்று ஸ்பூன், அரிசி மாவு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக ஒரு முறை கிளறவேண்டும். கிளறிய பின்பு ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் தெளித்து கைகளால் நன்றாக பிசையவும்.
பிறகு உங்கள் உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மேல் படத்தில் காட்டியுள்ளது போல் கட்லெட்டை தட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும் எண்ணெய் சூடானதும் தட்டி வைத்திருக்கும் கட்லெட்டை சேர்த்து பொரித்து எடுத்தால் போதும் சுவையான மாலை நேர மொறு மொறுன்னு ஸ்னாக்ஸ் தயார். கண்டிப்பாக ஒரு முறை இந்த ஸ்னாக்ஸை செய்து பாருங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செய்யும் பொழுதே சுவைக்க தூண்டும் பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |