புரட்டாசி வந்துடுச்சு கறி குழம்பு சாப்பிடணும் போல இருக்கா.! அப்போ இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க..

Advertisement

பொரிச்ச குழம்பு வைப்பது எப்படி.?

வாரத்தில் ஒரு நாளாவது அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதில் புரட்டாசி வந்து விட்டது. இந்த ஒரு மாதம் எப்படிடா அசைவம் சாப்பிடாமல் இருக்க போகிறோம் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு நாளையும் எண்ணி கொண்டே இருப்பார்கள். புரட்டாசி வந்து விட்டது என்று கவலை வேண்டாம். ஏனென்றால் கறி குழம்பு சுவையில் இந்த பதிவில் பொரிச்ச குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொரிச்ச குழம்பு செய்வது எப்படி.?

பொரிச்ச குழம்பு வைப்பது எப்படி

பொரிச்ச குழம்பு வைக்க தேவையான பொருட்கள் பொரிச்ச குழம்பு செய்முறை
எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் நறுக்கியது-1

தக்காளி நீளவாக்கில் நறுக்கியது-2

உருளைக்கிழங்கு நறுக்கிய-1

முருங்கைக்காய் நறுக்கியது-2

மிளகாய் தூள்- 3 ஸ்பூன்

மல்லி தூள்-2 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

முதலில் அடுப்பில் கடாய் வைத்து  அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி கொள்ள்வும். அதன் பிறகு அதில் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்த காய்கறியான முருங்கைக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, மல்லி தூள் 2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 3 தேக்கரண்டி சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதிலேயே தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

காய்கறி வெந்த பிறகு அரைத்து வைத்த தேங்காவை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

அனைவருக்கும் பிடித்த தக்காளி சாம்பார் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement