Potato Evening Snacks in Tamil
ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் டீயுடன் சேர்த்து ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். அதுவும் குறிப்பாக மழைகாலம் வந்தால் போதும் நம்முடைய நாக்கு சூடாகவும், காரமாகவும் இருக்கும் ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் தேடும். இத்தகைய நிலை எல்லோருக்கும் நடந்தாலும் கூட பெரும்பாலான வீடுகளில் ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று தான் யோசிப்பார்கள். ஏனென்றால் ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் நிறைய பொருட்கள் வேண்டும் அதனை வாங்க செலவாகும் என்று யோசித்து அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இனி ஈஸியாக அதுவும் 10 நிமிடத்தில் உருளைக்கிழங்கை மட்டும் வைத்து அருமையான ரெசிபியை செய்யலாம். சரி வாங்க அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..!
உருளைக்கிழங்கு ஃபிங்கர் செய்ய தேவையான பொருட்கள்:

- ரவை- 1 ஸ்பூன்
- மைதா மாவு- 1 ஸ்பூன்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- உருளைக்கிழங்கு- 3
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- கொத்தமல்லி- தேவையான அளவு
Potato Finger Fry Recipe in Tamil:
தேவையான பொருள் |
செய்முறை விளக்கம் |
விளக்கம்- 1 |
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் வைத்து உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். |
விளக்கம்- 2 |
இப்போது வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை தோல் நீக்கி உறித்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். |
விளக்கம்- 3 |
அடுத்து பவுலில் உள்ள கிழங்குடன் மிளகு, ரவை, மைதா மற்றும் அரிசி மாவு என இவை அனைத்தினையும் நன்றாக 2 நிமிடம் வரை பிசைந்து கொள்ளுங்கள். |
விளக்கம்- 4 |
2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். |
விளக்கம்- 5 |
கடைசியாக கையில் சிறிதளவு எண்ணெயினை தடவி கொண்டு செய்து வைத்துள்ள மாவினை கையில் தொட்டு நீளமாக ஃபிங்கர் போல செய்து வைத்து விடுங்கள். |
விளக்கம்- 6 |
இதனை தொடர்ந்து கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் செய்து வைத்துள்ள ஃபிங்கரை போட்டு பொன் நிறமாக வரும் வரை பொரிய விட்டு எடுக்க வேண்டியது தான். |
விளக்கம்- 7 |
அம்புட்டு தான் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் தயார். |
விளக்கம்- 8 |
இதேபோல் மீதம் இருக்கும் மாவினையும் செய்து கொள்ளுங்கள். |
நீங்க அப்பம் சாப்ட்ருப்பீங்க ஆனா இந்த மாதிரி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க