வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உருளைக்கிழங்கு இருந்தா போதும் Simple ஈவினிங் டீ டைம் ஸ்னாக்ஸ் தயார்..!

Updated On: October 20, 2023 12:23 PM
Follow Us:
Potato Nuggets Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Potato Nuggets Recipe in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அது தினமும் ஒரு புதுமையான உணவினை செய்து சுவைத்து பார்க்க வேண்டும் என்பது தான். அதிலும் குழந்தைகள் சொல்லவே வேண்டாம் தினமும் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என்ன புதுமையான ஸ்னாக்ஸ் வைத்திருக்கிறீர்கள் என்பதை கேட்டு கொண்டே தான் வீட்டிற்குள் வருவார்கள். அப்பொழுது அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸை செய்து தரவில்லை என்றால் நம்மை அவர்கள் விடாமல் தொல்லை செய்து கொண்டிருப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ் ஆன உருளைக்கிழங்கு Nuggets செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Potato Snacks Recipe in Tamil:

Potato Snacks Recipe in Tamil

குழந்தைகளுக்கு மிக மிக அதிக அளவு பிடித்த ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ் ஆன உருளைக்கிழங்கு Nuggets செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. பிரட் – 4
  2. உருளைக்கிழங்கு – 6
  3. வெங்காயம் – 1
  4. கேரட் – 1
  5. மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. கரம்மசாலா – 2 டேபிள் ஸ்பூன் 
  7. சோளமாவு – 4 டேபிள் ஸ்பூன் 
  8. உப்பு – தேவையான அளவு
  9. தண்ணீர் – தேவையான அளவு
  10. எண்ணெய் – தேவையான அளவு

வஞ்சரம் மீன வச்சி கோலா உருண்டையா புதுசா இருக்கே

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 பிரட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியை அரைத்து வைத்து கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 6 உருளைக்கிழங்குகளை நன்கு வேகவைத்து தோல்களை நீக்கி நன்கு மசித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 வெங்காயம் மற்றும் 1 கேரட் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

அடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள், 2 டேபிள் ஸ்பூன் கரம்மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள பிரெட் தூளில் பாதியளவு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை சிறிய சிறிய உருண்டைகளாகவோ உங்களுக்கு விருப்பமான வடிவில் உருட்டி வைத்து கொள்ளுங்கள்.

வாழைப்பூ பொடிமாஸ் செய்வது எப்படி தெரியுமா

ஸ்டேப் – 4

பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் சோளமாவுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு எடுத்து நாம் அரைத்து வைத்துள்ள பிரட் தூளில் போட்டு புரட்டி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

Evening snacks recipes in tamil

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயாரித்து வைத்துள்ள Nuggets-யை போட்டு பொறித்து எடுத்தால் மிகவும் சுவையான உருளைக்கிழங்கு Nuggets தயார்.

வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இதனை உங்க வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

பச்சைமிளகாய் ஊறுகாயை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க சுவை நாக்கைவிட்டு நீங்காது

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

sorakkai podimas seivathu eppadi in tamil

குஜராத்தி ஸ்பெஷல் துதி தோக்லி (சுரைக்காய் பொடிமாஸ்) Recipe ….

mutton kabab recipe in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

bakrid special mutton biryani in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

carot payasam

பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

chicken malai tikka recipe in tamil

ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி