சுவையான உருளைகிழங்கு புலாவ்

Advertisement

உருளைகிழங்கு புலாவ்

உங்க வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு தினமும் வித விதமாக சமைத்தால் தான் சாப்பிடுகிறீர்களா அல்லது அவர்கள் லன்ச் பாக்ஸ் எப்போதும் நீங்கள் கொடுத்து அனுப்பியது அப்படியே வருகிறதா, அதற்கு காரணம் அவர்கள் புது புது விதமான உணவை விரும்புகிறார்கள் என்று அர்த்தம். உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் இந்த உணவை மிகவும் ஈசியாக செய்து முடித்து விடலாம். வாருங்கள் அப்படி ஒரு ஈஸியான உணவான உருளைகிழங்கு புலாவ் செய்வது எப்படி  என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உருளைக்கிழங்கு புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 50 கிராம்
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது
உருளைக்கிழங்கு – 300 கிராம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பிரியாணி இலை -2
ஏலக்காய் -3
கிராம்பு – 3
இலவங்கப்பட்டை – 1
கடுகு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி –  தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு

உருளைக்கிழங்கு புலாவ் செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு புலாவுக்கு தேவையான பதத்தில் சாதத்தை தயாரித்து வைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பிரியாணி இலை, சோம்பு, சீரகம், ஏலக்காய், கிராம்பு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மென்மையாக வதக்கவும்.

பின்னர் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். இப்போது நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்குகளை சேர்த்துக்கொள்ளவும். அதனை நன்றாக வதக்கவும்.

அடுத்ததாக மஞ்சள் தூள், கார சுவை தேவைப்பட்டால் பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளவும்.

உணவின் சுவை அதிகரிக்க சிறிதளவு தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து அதனை மசாலாக்கள் உடன் சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் கிழங்கு வேக போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

கிழங்கு வெந்ததும் தயாரித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறி புதினா கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் போதும்.

சுவையான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி.

இதனை உங்கள் வீட்டில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement