Quick Dinner Recipes in Tamil
பொதுவாக, பெண்களுக்கு தினமும் மூன்று வேலையும் என்ன சமைப்பது என்ற குழப்பம் இருக்கும். அதாவது, காலையில் என்ன breakfast செய்வது.? மதியம் என்ன lunch செய்வது.? மற்றும் இரவு என்ன dinner செய்வது.? போன்ற குழப்பம் இருக்கும். ஆகவே, தினமும் ஒரே மாறியான உணவு சமைத்து போர் அடித்து விட்டது என்று கூறும் பெண்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் சூப்பரான வித்தியாசமான டின்னர் ரெசிபி ஒன்று பற்றி பார்க்கலாம் வாங்க.
பெரும்பாலான வீடுகளில் காலை இரவு என இரண்டு வேலையும் தோசை அல்லது இட்லி போன்ற உணவு தான் செய்வார்கள். இதனை தவிர்த்து சப்பாத்தி செய்வார்கள். எனவே, இட்லி மாவு இல்லாத நேரத்தில் வித்தியாசமான முறையில் இந்த ஹெல்த்தியான தோசையை செய்து அசத்துங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Healthy Dinner in Tamil:
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி மாவு – 1 கப்
- ரவை – 2 ஸ்பூன்
- தயிர் – 1/4 கப்
- தண்ணீர் – 2 கப்
- உப்பு – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – 1 துண்டு
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – 1 கைப்பிடி
- வெங்காயம் – 1
- கேரட் – 1
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில், ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு, ரவை மற்றும் தயிர் சேர்த்து மாவு கரைப்பதற்கு தேவையான அளவிற்கு (2 கப்) தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
மாவை நன்கு கரைத்த பிறகு, அதனை 15 நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் வரை புளிக்கவிடுங்கள்.
சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் பராத்தா செய்முறை விளக்கம்.
ஸ்டேப் -3
இந்நேரத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நன்கு கழுவி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அடுத்து, புளிக்க வைத்துள்ள மாவை எடுத்து அதனுடன், பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
அதன் பின், இதனுடன், மஞ்சள் தூள், மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சேர்த்து கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -6
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது தோசை மாவு தயார்..
ஸ்டேப் -7
இப்போது, அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, கல் சூடானதும் அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசையாக வார்த்து நன்கு சிவற விட்டு எடுங்கள்.
ஸ்டேப் -8
அவ்வளவுதாங்க.. 10 நிமிடத்தில் தோசை மாவு இல்லாத மொறு மொறு ஹெல்தி டின்னர் தயார்..!
வெஜ் கார்லிக் நூடுல்ஸ் செய்முறை விளக்கம் பற்றி அறிய படத்தை கிளிக் செய்யவும்👇
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |