Rava Adai Recipe in Tamil
பொதுவாக நாம் அனைவருமே உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது உணவு. அப்படி மிகவும் முக்கியமான உணவினை சரியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அதிலும் குறிப்பாக காலை உணவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சிலர் வேலைக்கு செல்லுவதால் நேரமில்லாமல் சரியாக காலை உணவை சாப்பிடவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் வெறும் 10 நிமிடத்தில் செய்ய கூடிய ஒரு எளிமையான காலை உணவு ரெசிபியை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன ரெசிபி அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Simple Breakfast Recipes in Tamil:
நாம் அனைவருக்குமே காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். ஆனால் ஒரு சிலர் காலை உணவினை தயாரிக்க நேரம் இல்லாததால் சாப்பிடாமல் வேலைக்கு சென்று விடுவார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் வெறும் 10 நிமிடத்தில் செய்ய கூடிய ரவை அடை ரெசிபி செய்முறை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- ரவை – 1 கப்
- கோதுமை மாவு – 1 கப்
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
- கேரட் – 1
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
உருளைக்கிழங்கு இருந்தா போதும் Simple ஈவினிங் டீ டைம் ஸ்னாக்ஸ் தயார்
ரவை அடை செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் ரவை மற்றும் 1 கப் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 சிறிய துண்டு இஞ்சி, 1 கேரட், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வஞ்சரம் மீன வச்சி கோலா உருண்டையா புதுசா இருக்கே
ஸ்டேப் – 3
அடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிர், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதில் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை சிறிய சிறிய அடை போல் தட்டி சேர்த்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் நமது சுவையான ரவை அடை தயாராகிவிடும்.
வாழைப்பூ பொடிமாஸ் செய்வது எப்படி தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |