காலைப்பொழுதை இனிமையாக்க 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான Breakfast..!

Advertisement

Rava Kichadi Seivathu Eppadi

பொதுவாக சிலருக்கு காலை சாப்பாடு சாப்பிடாமல்  இருப்பது ஒரு வழக்கமாக இருக்கும். ஏனென்றால் வேலைக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது என்ற காரணத்தினை கூறி விட்டு சாப்பிடாமல் போய்விடுவார்கள். அதுவே இட்லி, தோசை இல்லாமல் வேறு ஏதேனும் சப்பாத்தி, பூரி என இவற்றை எல்லாம் செய்து வைத்தால் போதும் எவ்வளவு நேரம் ஆகினாலும் சாப்பிட்டு விட்டு தான்  செல்வார்கள். அப்படி பார்த்தால் தினமும் சப்பாத்தி, பூரி செய்வது என்பது சாத்தியமற்ற ஒரு செயல். அதனால் இன்று மிகவும் எளிமையான முறையில் அதுவும் குறைவான நேரத்தில் ஒரு அசத்தலான காலை நேர சாப்பாட்டினை செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம். ஆகவே பதிவை தொடர்ந்து படித்து அது என டிஷ் என்று தெரிந்துக்கொண்டு உங்களுடைய வீட்டிலும் செய்து அசத்தலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரவை கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:

 ரவா கிச்சடி செய்முறை

  1. கடுகு- 1 ஸ்பூன்
  2. கடலை பருப்பு- 1 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய்- 4
  5. இஞ்சி- சிறிய துண்டு
  6. வெங்காயம்- 1 பெரியது
  7. தக்காளி- 1
  8. கேரட்- 1
  9. பீன்ஸ்- 6
  10. பட்டாணி- 1 கைப்பிடி அளவு
  11. மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
  12. ரவை- 1 கப்
  13. தண்ணீர்- 2 1/2 கப்
  14. முந்திரி- சிறிதளவு
  15. எண்ணெய்- தேவையான அளவு
  16. உப்பு- தேவையான அளவு
  17. கறிவேப்பிலை- சிறிதளவு

ரவா கிச்சடி செய்முறை:

குறிப்பு செய்முறை விளக்கம்
காய்கறிகளை நறுக்குதல் முதலில் எடுத்துவைத்துள்ள பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக அலசி விட்டு ரவா கிச்சடி செய்ய நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
ரவா வதக்குதல் இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 கப் ரவையை சேர்த்து நன்றாக பொன் நிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் சேர்த்தல் அடுத்து அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக பொரிய விடுங்கள்.
தக்காளி, வெங்காயம் சேர்த்தல் இதனை தொடர்ந்து கடாயில் உள்ள பொருளுடன் தக்காளி, வெங்காயம், இஞ்சி மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள்.
மஞ்சள்தூள் சேர்த்தல் 2 நிமிடம் கழித்து மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
காய்கறிகளை சேர்த்தல் அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை கடாயில் சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை கலந்து விட்டு 2 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
வறுத்த ரவையை சேர்த்தல் கடைசியாக தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு வறுத்த ரவையை அதில் சேர்த்து கலந்து கொண்டு 5 நிமிடம்  அப்படியே வைத்து விட்டு இறக்கி விடுங்கள்.
ரவை கிச்சடி தயார் அவ்வளவு தான் சுவையான ரவை கிச்சடி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உருளைக்கிழங்கு இருந்தா போதும் Simple ஈவினிங் டீ டைம் ஸ்னாக்ஸ் தயார் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement