கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை செய்வது எப்படி..?

Advertisement

Recipe of Neer Dosa in Tamil

இந்த உலகில் நாம் சுகமாக வாழவேண்டும் என்றால் நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை, உறைவிடம் (வாழ்விடம்) ஆகியவை தான். இவை முன்றும் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால் அவர் நிம்மதியாக வாழ்வார். அதிலும் குறிப்பாக இதில் முதலாவதாக உள்ள உணவு என்பது அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் அனைவருமே உணவின் மீது மிகவும் விருப்பமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் உணவின் மீது மிகவும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அதாவது பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு அதனை செய்து சுவைத்து மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Neer Dosa Recipe in Tamil:

Neer Dosa Recipe in Tamil

உணவு பிரியர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அனைத்து வகையான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஆசை.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. அரிசி – 1 கப் 
  2. தேங்காய் துருவல் – 1/2 கப் 
  3. மிளகு – 1 டேபிள் ஸ்பூன் 
  4. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. உப்பு – தேவையான அளவு
  6. தண்ணீர் – 2 1/2 கப் 

தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை செய்வது எப்படி தெரியுமா

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் உறவைத்துள்ள 1 கப் அரிசி, 1/2 கப் தேங்காய் துருவல், 1 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி

ஸ்டேப் – 3

அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

How to make neer dosa in tamil

இப்பொழுது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது நன்கு சூடு ஆனவுடன் அதில் நாம் கலந்து வைத்துள்ள மாவினை தோசையாக ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போடு எடுத்தீர்கள் என்றால் மிகவு சுவையான நீர் தோசை தயார்.

வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

பீர்க்கங்காய் துவையலை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க நாக்கிலிருந்து சுவை நீங்கவே நீங்காது

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement