தக்காளி சூப் செய்வது எப்படி ?
தக்காளி சூப் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தக்காளி சூப் எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம். அனைத்து விதமான உணவுக்கும் சரியான தேர்வாக இருக்கும். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட தக்காளி சூப் இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். அதுமட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. முக பொலிவுக்கு தக்காளி மிகவும் இன்றியமையாது. வீட்டில் தயாரிக்கும் உணவுகள் என்றாலே தனி ருசியாக இருக்கும். அதுவும் தக்காளி சூப் உணவாக சுவையில் வீட்டில் தயாரித்தல் மிகவும் சுவையாக இருக்கும்.உங்களுக்கு உணவாக சுவையில் தக்காளி சூப் எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தக்காளி சூப் செயவது எப்படி ?
தக்காளி சூப் செய்ய தேவையான பொருட்கள்:
வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
வெங்காயம்
பூண்டு
தக்காளி
தண்ணீர்
தேவைக்கேற்ப உப்பு
சர்க்கரை
கருப்பு மிளகு – தேவைக்கேற்ப
ரொட்டி க்யூப்ஸ்
ஆலிவ் எண்ணெய்
உப்பு
கொத்தமல்லி
தக்காளி சூப் செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் உருகும் வரை சூடாக்கவும்.
வெண்ணெய் உடன் கிராம்பு இலவங்க பட்டை, ஏலக்காய் சேர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பூண்டை 3 முதல் 4 நிமிடங்கள் வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் மென்மையாக வதங்கிய உடன் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு கடாயை மூடி, தக்காளி மென்மையாகும் வரை அல்லது சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வரை குறைந்த வெப்பத்தில் வேக வைக்கவும்.
தக்காளிக்கு தண்ணீர் தேவை இல்லை, ஆனால் தக்காளி மென்மையாக வேக தண்ணீர் தேவை என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
தக்காளி மென்மையாக வெந்த பின்னர் வெப்பத்தை குறைத்து அதனை 10 நிமிடங்கள் வரை குளிரவிட வேண்டும்.
குளிர்த்த பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பொடியாக்கிய மிளகை மற்றும் புதினாவை சேர்த்து பரிமாறலாம்.
தக்காளி சூப், சாதம் இட்டலி தோசை போன்ற அனைத்திற்கும் நல்ல சைடு டிஷ்ஆக இருக்கும்.
கண்ணனுக்கு பிடித்த வெண்ணெயுடன்…கிருஷ்ண ஜெயந்தி special பாதாம் கீர்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |