Seeyam Sweet Recipe in Tamil
பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு புது வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு இந்த ஆசை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சுவையான உணவுகளை தேடி தேடி சென்று சாப்பிடுவார்கள். அப்படி சைவ பிரியர்கள் அனைவராலும் தேடி தேடி சென்று விரும்பி சாப்பிடப்படும் பல வகையான உணவு முறைகளில் இந்த காரைக்குடி உணவு வகைகளும் ஒன்று. அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் காரைக்குடி உணவு வகைகளில் பலரது மனதிற்கு பிடித்த ஒரு உணவு தான் இந்த இனிப்பு சுழியம். இதனை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த காரைக்குடி ஸ்பெஷல் இனிப்பு சுழியத்தை செய்து சுவைத்து பாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chettinad Special Sweet Seeyam Recipe in Tamil:
உணவு பிரியர்கள் அல்லது ரசிகர்களுக்கு அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அது இந்த உலகில் உள்ள அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட்டு மகிழ வேண்டும் என்பது தான்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் காரைக்குடி ஸ்பெஷல் இனிப்பு சுழியத்தை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- அரிசி – 1/2 கப்
- உளுந்து – 1/2 கப்
- நாட்டு சர்க்கரை – 1/2 கப்
- கடலைப்பருப்பு – 1/2 கப்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 1/4 கப்
- ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை
- உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை செய்வது எப்படி
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் அரிசி, 1/2 கப் உளுந்து ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பின்னர் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் 1/2 கப் நாட்டு சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரையும் அளவிற்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை செய்வது எப்படி தெரியுமா
ஸ்டேப் – 4
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் கடலைப்பருப்பை நன்கு சுத்தம் செய்துவிட்டு ஒரு குக்கரில் சேர்த்து 6 விசில் வைத்து வேகவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் 1/4 கப் தேங்காய்த்துருவலை மற்றும் 1 சிட்டிகை ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் வேகவைத்து மசித்து வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி
ஸ்டேப் – 6
அடுத்து அதனுடன் நாம் தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகினை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 7
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நன்கு சூடு படுத்தி கொள்ளுங்கள். பிறகு நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நாம் முன்னரே தயாரித்து வைத்திருந்த அரிசி மாவு கலவையில் போட்டு எடுத்து, எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் நமது சுவையான காரைக்குடி ஸ்பெஷல் இனிப்பு சுழியம் தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
பீர்க்கங்காய் துவையலை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க நாக்கிலிருந்து சுவை நீங்கவே நீங்காது
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |