Shrikhand Sweet Recipe in Tamil
பொதுவாக நமது இல்லங்களில் அல்லது ஏதாவது மிகவும் முக்கியமான விசேஷ நாட்களில் அந்த நாட்களுக்கு உரிய அனைத்தையும் நாம் செய்து கொண்டாடுவது தான் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வழக்கமாக உள்ளது. அதேபோல் தான் கிருஷ்ணர் பிறந்த தினமான கோகுலாஷ்டமி அன்றைக்கும் அன்றைய தினத்துக்கு உரிய உணவுகள், பலகாரங்கள் மற்றும் அலங்காரங்களை செய்து கொண்டாடப்படும்.அன்றைய தினத்தில் கிருஷ்ணரை மிகவும் அழகாக அலங்காரம் செய்து அவருக்கு மிகவு பிடித்த உணவுவகைகளை செய்து அவருக்கு படைத்துவிட்டு நாமும் சாப்பிட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ஸ்ரீகந்த் இனிப்பு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Gokulashtami Recipes in Tamil:
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த உணவுகளை அவருக்கு படைத்துவிட்டு அனைவரும் உண்பது வழக்கம். அப்படி அவருக்கு படைக்கும் உணவுகளில் ஒன்று தான் இந்த ஸ்ரீகந்த் இனிப்பு செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.
முதலில் இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- தயிர் – 500 மி.லி
- சர்க்கரை – 4 1/2 டேபிள் ஸ்பூன்
- பால் – 4 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ – 2 சிட்டிகை
- ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
- பாதாம் – 5
- பிஸ்தா – 5
- முந்திரி – 5
இப்படி செஞ்சி கொடுங்க சுரைக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டேபிள் ஸ்பூன் பாலுடன் 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மீது நன்கு சுத்தமான வெள்ளைநிற துணியை போட்டு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி தயிரை சேர்த்து அதில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
தயிரில் உள்ள தண்ணீர் அனைத்தும் நீங்கிய பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் கட்டிகள் ஏதும் இல்லாத அளவிற்கு நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் முன்னரே குங்குமப்பூ கலந்து வைத்துள்ள பாலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சுண்டைக்காய் கூட்டினை இப்படி செஞ்சி சாப்புடுங்க கசப்பே தெரியாது
ஸ்டேப் – 4
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து நாம் எடுத்து வைத்திருந்த 4 1/2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து நாம் கலந்து வைத்துள்ள கலவையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் அதில் 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூளையும் சேர்த்து நன்கு கலந்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதன் மீது நாம் எடுத்து வைத்திருந்த 5 பாதாம், 5 பிஸ்தா மற்றும் 5 முந்திரி ஆகியவற்றை பொடியாக தூவிவிட்டிர்கள் என்றால் நமது கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ஸ்ரீகந்த் இனிப்பு தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு சுழியம் செய்வது எப்படி தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |