வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 கப் அவல் இருந்தா போதும் மிகவும் சுவையான Breakfast தயாராகிவிடும்..!

Updated On: December 13, 2023 5:32 PM
Follow Us:
Simple Tiffin Recipes in Tamil
---Advertisement---
Advertisement

Simple Tiffin Recipes in Tamil

பொதுவாக நாம் அனைவருமே உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது உணவு. அப்படி மிகவும் முக்கியமான உணவினை சரியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அதிலும் குறிப்பாக காலை உணவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் ஒரு சிலர் வேலைக்கு செல்லுவதால் நேரமில்லாமல் சரியாக காலை உணவை சாப்பிடவே மாட்டார்கள். அதனால் காலை உணவை மிகவும் எளிமையாக சமைத்தால் நேரமும் மிட்சமாகும்.

அதனால் அனைவருமே காலை உணவினை தவறாமல் சாப்பிட முடியும். எனவே தான் உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் 1 கப் அவலை வைத்து வெறும் 10 நிமிடத்தில் செய்ய கூடிய ஒரு எளிமையான காலை உணவு ரெசிபியை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன ரெசிபி அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Healthy Tiffin Recipes in Tamil:

Healthy Tiffin Recipes in Tamil

மிகவும் சுவையான மற்றும் மிகவும் எளிமையான ஒரு ரெசிபியை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. சிவப்பு அவல் – 1 கப்
  2. நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  4. கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் – 1
  7. பெருங்காயத்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  8. வெங்காயம் – 1
  9. பச்சை மிளகாய் – 2
  10. இஞ்சி – 1 துண்டு 
  11. கருவேப்பிலை – 1 கொத்து 
  12. கேரட் – 1
  13. பச்சை பட்டாணி – 1/2 கப் (வேகவைத்தது)
  14. மஞ்சள்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  15. துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  16. கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
  17. உப்பு – தேவையான அளவு
  18. தண்ணீர் – தேவையான அளவு

உங்களது இரவு நேரத்தை சுவையாக மற்ற சோள குழிப்பணியாரம் ரெசிபி செய்வது எப்படி தெரியுமா

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் சிவப்பு அவலை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு,  1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 காய்ந்த மிளகாய் மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பின்னர் அதனுடன் 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி,  1 கொத்து கருவேப்பிலை மற்றும் 1 கேரட் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

சமைக்கும் பொழுதே சுவைக்க தூண்டும் ஹைதராபாத் சிக்கன் Fry செய்வது எப்படி

ஸ்டேப் – 4 

அடுத்து அதில் 1/2 கப் (வேகவைத்தது) பச்சை பட்டாணி, 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், நாம் ஊறவைத்திருந்த 1 கப் சிவப்பு அவலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

Red aval recipes in tamil

இறுதியாக அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் நமது சுவையான அவல் உப்புமா தயாராகிவிடும்.

லஞ்சிக்கு வெறும் 10 நிமிடத்தில் சுவையான வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now