உங்களது இரவு நேரத்தை சுவையாக மற்ற சோள குழிப்பணியாரம் ரெசிபி செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Sola Paniyaram Recipe in Tamil

பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு புது வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாம் அனைவருமே வேலைக்கு மற்றும் பள்ளிகளுக்கு சென்று ஓய்வெடுக்க வரும் நேரமான இரவு நேர உணவினை மிகவும் சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்ற வேண்டும் என்ற ஆசை நாம் அனைவருக்குமே அதிகமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் சுவையான இரவு உணவினை எவ்வாறு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிமையான இரவு உணவினை செய்து சுவைத்து பாருங்கள்..! அப்புறம் பாருங்க திரும்ப திரும்ப செய்து சுவைப்பிங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சோள பணியாரம் செய்வது எப்படி.?

Jowar paniyaram recipe in tamil

நாம் அனைவருக்குமே உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். அதிலும் குறிப்பாக இரவு உணவு என்பது மிக மிக முக்கியம். அதனால் தாம் மிகவும் எளிமையான மற்றும் சுவையான இரவு உணவு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவைப்படும் பொருட்கள்:

  1. ஜோவார் – 2 கப்
  2. இட்லி அரிசி – 2 கப்
  3. உளுத்தம் பருப்பு – 3/4 கப் 
  4. அவல் – 1/4 கப் 
  5. வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  6. கடுகு – 1 டீஸ்பூன் 
  7. உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் 
  8. பச்சை மிளகாய் – 2
  9. வெங்காயம் – 1
  10. கருவேப்பிலை – 1 கொத்து 
  11. கேரட் – 1
  12. கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு  
  13. எண்ணெய் – தேவையான அளவு 
  14. உப்பு – தேவையான அளவு

சமைக்கும் பொழுதே சுவைக்க தூண்டும் ஹைதராபாத் சிக்கன் Fry செய்வது எப்படி

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் ஜோவார் மற்றும் 2 கப் இட்லி அரிசி இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 4 மணிநேரமும், 3/4 கப் உளுத்தம் பருப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 3 மணிநேரமும் நன்கு ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

1/4 கப் அவலில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 1/4 மணிநேரமும் நன்கு ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மாவில் தேவையான அளவு உப்பினை சேர்த்து நன்கு கலந்து 5 மணிநேரம் நன்கு புளிக்க வைத்து கொள்ளுங்கள்.

லஞ்சிக்கு வெறும் 10 நிமிடத்தில் சுவையான வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி

ஸ்டேப் – 3

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பினை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

பிறகு அதனுடன் 2 பச்சை மிளகாய், 1 வெங்காயம், 1 கொத்து கருவேப்பிலை மற்றும் 1 கேரட்  ஆகியவற்றை பொடியாக சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் இதனை நாம் தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

Chola paniyaram recipe in tamil

அடுத்து அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நாம் தயாரித்து வைத்துள்ள மாவினை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் நமது சுவையான இரவு உணவான சோள பணியாரம் தயாராகிவிடும்.

ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா மட்டன் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!

 

Advertisement