கறிகொழம்பு சுவையை மிஞ்சும் சப்பாத்தி சுரைக்காய் கிரேவி செஞ்சு பாருங்க..

Advertisement

சுரைக்காய் கிரேவி

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக சப்பாத்தி உள்ளது. இதற்கு குர்மா அல்லது தொக்கு, கிரேவி போன்றவை வைத்து தான் சாப்பிடுவோம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஷாக புதிது புதிதாக வைத்து சாப்பிட விடும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சுரைக்காயை பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் சப்பாத்திக்கு ஏற்ற சுரைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுரைக்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  1. சுரைக்காய், தோலை உரித்து க்யூப்ஸாக நறுக்கவும்
  2. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  3. கரம் மசாலா- 2 டீஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய்- 2
  5. வெங்காயம்-1
  6. இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
  7. எண்ணெய் -3 ஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை- சிறிதளவு
  10. தக்காளி- 1
  11. மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
  12. கிராம்பு – 2
  13. ஏலக்காய்- 2
  14. பட்டை- 1 துண்டு
  15. தேங்காய்- சிறிதளவு

சுரைக்காயில் மொறுவலான அடை தோசை அதுவும் 1/2 மணிநேரத்தில் செய்யலாம் வாங்க..!

சுரைக்காய் கிரேவி செய்முறை:

 சுரைக்காய் கிரேவி

கடாய் எடுத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும், பின் அதில் சிறிதளவு பெருஞ்சீரகம், சீரகம், மிளகு, 2 காய்ந்த மிளகாய், 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 துண்டு பட்டை சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தேங்காய் சேர்த்து வதக்கி பேஸ்ட்டாக அரைத்து வைத்து கொள்ளவும்.

அடுத்ததாக அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

 சுரைக்காய் கிரேவி

அதன் பிறகு அதில் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கி கொள்ளவும். தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், 1 1/2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு அதனுடன் நறுக்கி வைத்த சுரைக்காயை சேர்த்து 10 நிமிடத்திற்கு வதக்க வேண்டும். அதன் பிறகு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

 சுரைக்காய் கிரேவி

சுரைக்காய் வெந்த பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

கசப்பே தெரியாமல் சுண்டைக்காய் வறுவல் எப்படி செய்யணுமுன்னு தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement