சுரைக்காய் பொடிமாஸ்
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாக சப்பாத்தி உள்ளது. இதற்கு குர்மா அல்லது தொக்கு, கிரேவி போன்றவை வைத்து தான் சாப்பிடுவோம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல பலரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஷாக புதிது புதிதாக வைத்து சாப்பிட விடும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சுரைக்காயை பலரும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் இந்த பதிவில் சப்பாத்திக்கு ஏற்ற சுரைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
சுரைக்காய் பொடிமாஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- சுரைக்காய் – 1
- மைதா – 4 டேபிள் ஸ்பூன்
- Corn Flour – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா – அரை டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
வதக்குவதற்கு தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து (நறுக்கியது)
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாஸ் – 8 டேபிள் ஸ்பூன்
- Green Chilly sauce – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- Corn Flour – 1 டேபிள் ஸ்பூன்
சுரைக்காய் பொடிமாஸ் செய்முறை:
முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
ஒரு கடாயை சூடாக்கி அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் மைதா, ஒன்றரை டேபிள் ஸ்பூன் Corn Flour, 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரை டேபிள் ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
அதன் பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும். (பக்கோடாவிற்கு பிசைவது போல )
பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவை சின்ன சின்னதாக பக்கோடா போல உருட்டி வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய கருவேப்பிலை 1 கொத்து, நறுக்கிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
பின் அதில் 8 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், 1 டேபிள் ஸ்பூன் Green Chilly sauce, அரை டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின் அதில் 300 ml தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் Corn Flour மாவு எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து அதனை கொதித்து கொண்டிருக்கும் கடாயில் ஊற்றவும். பின் அதில் வறுத்து வைத்திருக்கும் காளான், முட்டைகோஸை சேர்த்து கிண்டவும்.
பின்னர் இதனை இன்னொரு பாத்திரத்தில் மாற்றி நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்தால் சுவையான சுரைக்காய் பொடிமாஸ் தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |