Sorakkai Vadai Recipe in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். எனவே தான் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களது தினசரி உணவில் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்ற சுரைக்காய் வடை செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த சுரைக்காய் வடையை செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
சுரைக்காய் வடை செய்வது எப்படி..?
நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை அளிக்கக்கூடிய சுரைக்காயை நம்மில் பலரும் அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதனை பார்த்தாலே மிகவும் வெறுப்பார்கள்.
அதனால் தான் சுரைக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான சுரைக்காய் வடை செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.. இப்படி செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும் . அதனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சுரைக்காய் – 1/2 காய்
- வெங்காயம் – 1
- பச்சைமிளகாய் – 2
- கருவேப்பில்லை – 1 கொத்து
- கொத்தமல்லி இலை – 1/4 கப்
- அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
சுண்டைக்காய் கூட்டினை இப்படி செஞ்சி சாப்புடுங்க கசப்பே தெரியாது
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 சுரைக்காய்யை அதன் தோல்களை நீக்கிவிட்டு நன்கு பொடியாக துருவி கொள்ளுங்கள். அதேபோல் நாம் எடுத்து வைத்துள்ள 1 வெங்காயம், 2 பச்சைமிளகாய் மற்றும் 1 கொத்து கருவேப்பில்லை ஆகியவற்றையும் நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் துருவி வைத்துள்ள 1/2 சுரைக்காய்யை சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள 1 வெங்காயம், 2 பச்சைமிளகாய் மற்றும் 1 கொத்து கருவேப்பில்லை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு சுழியம் செய்வது எப்படி தெரியுமா
ஸ்டேப் – 3
அடுத்து அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள், 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி அதில் நாம் கலந்து வைத்துள்ள கலவையை சிறிய சிறிய வடையாக தட்டி போட்டு நன்கு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது சுவையான சுரைக்காய் வடை தயாராகிவிட்டது. வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |