பூண்டு ஊறுகாய்
நம்மில் அதிகபேர் என்னதான் நிறைய உணவு வகைகள் இருந்தாலும் நாம் தேடுவது புளிப்பு சுவையுடைய காரசாரமான ஊறுகாய்யை தான். ஊறுகாய் இருந்தால் போதும் நமக்கு அனைத்துவகையான உணவுகளும் சாப்பிட போதுமானதாக இருக்கும். என்னதான் ஊறுகாய் எல்லாருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாக இருந்தாலும், அதனை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் சுவை நமக்கு பிடிப்பது இல்லை. நாம் முன்னோர்கள் பயன்படுத்திய பக்குவம் நமக்கு வருவதில்லை. அப்படி சுவையாக செய்தலும் சில நாட்களிலே அது கெட்டுவிடும். இந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்களும் சந்தித்திருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பதிவில் சுவையான பூண்டு ஊறுகாய் பலநாட்களுக்கு கெடாமல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பூண்டு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள்:
பூண்டு
பச்சை மிளகாய்
எண்ணெய்
கடுகு
புளி
வெல்லம்
வெந்தயம்
பெருஞ்சீரகம்
ஓமம்
மஞ்சள் தூள்
பெருங்காய தூள்
சிவப்பு மிளகாய் தூள்
உப்பு
பூண்டு ஊறுகாய் செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
மிதமான தீயில் பூண்டு பொன்னிறமாக மாறும் வரை வத
பூண்டு நன்றாக வதங்கியதும் அதனை மிளகாய் மற்றும் பூண்டை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அந்த எண்ணெயில், கடுகு, ஓமம், பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து குறைந்த வெப்பத்தில் வதக்கவும்.
பிறகு அந்த கலவையில் வதக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் மிளகாயை சேர்க்கவும்.
பூண்டு மிளகாய் உடன் மசாலாக்கள் நன்றாக கலந்த பின்னர் புளி கூழ் சேர்க்க வேண்டும். உங்களுக்கு புளிப்பு சுவை தேவைப்படும் பட்சத்தில் புளி பயன்படுத்தலாம்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும். குறைந்த வெப்பத்தில் பாத்திரத்தை முடி 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கடைசியாக சுவைக்காக சிறு துண்டு வெல்லம் சேர்த்து சமைக்கவேண்டும். எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் வரை மிதமான வெப்பத்தில் சமைக்க வேண்டும்.
இப்போது காரசாரமான பூண்டு ஊறுகாய் ரெடி.
சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊறுகாய் சுடுகுறைந்த பின்னர் பத்திரப்படுத்த வேண்டும். கண்ணாடி பாட்டிலில் சேமித்தல் பூண்டு ஊறுகாய் 2 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்.
அட்டகாசமான முருகைக்காய் கறி, அதுவும் கேரளா Special சுவையில்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |