Spicy Snacks Recipes in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே தின்பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அனைவருமே தினமும் ஒரு புதிய தின்பண்டங்களை சுவைக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதிலும் குறிப்பாக பள்ளி விட்டு திரும்ப வரும் குழந்தைகள் தினமும் பள்ளி விட்டு திரும்பும் போது அவர்கள் புதிய புதிய தின்பண்டங்கள் சுவைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நம்மால் தான் அவ்வாறு தினமும் ஒரு புதிய தின்பண்டங்களை செய்து தர முடியாது. ஏனென்றால் நாம் தின்பண்டம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு நேரம் தேவைப்படும். ஆனால் நமக்கும் நமது குழந்தைகளுக்கு தினமும் ஒரு புதிய தின்பண்டங்களை செய்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் ஒரு அருமையான தின்பண்டம் செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தின்பண்ட ரெசிபியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Potato Snacks Recipes in Tamil:
எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மிகவும் ருசியான ஸ்னாக்ஸ் ரெசிபியை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க
முதலில் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உருளைக்கிழங்கு – 3
- சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
- பிரட் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
உங்க வீட்டில் பழங்கள் இருக்கா அப்போ இந்த ரெசிபியை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 உருளைக்கிழங்குகளை நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் தோல்களை நீக்கிவிட்டு நன்கு மசிச்சி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அதில் நாம் எடுத்து வைத்துள்ள 3 டேபிள் ஸ்பூன் சோளமாவு, 1 டேபிள் ஸ்பூன் பிரட் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பின்னர் அதனை ஒரு பெரிய அளவு சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய பாட்டில் முடியினால் சிறிய வட்டங்களாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். மீதமுள்ள மாவுகளிலும் இதுபோன்ற சிறிய சிறிய வட்டங்களை செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நாம் தயார் செய்து வைத்துள்ள வட்டங்களை போட்டு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது சுவையான ஸ்னாக்ஸ் தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம் நீங்களும் இந்த ஸ்னாக்ஸ் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |