Sundakkai Kootu Recipe in Tamil
வணக்கம் நண்பர்கள..! இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். அதனால் அனைவருமே தங்களது தினசரி உணவில் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்ற சுண்டைக்காய் கூட்டினை செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த சுண்டைக்காய் கூட்டு செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Turkey Berry Kootu Recipe in Tamil:
நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை அளிக்கின்ற சுண்டக்காய் கூட்டினை எளிமையாக செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..
முதலில் இந்த கூட்டிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- சுண்டக்காய் – 1 கப்
- பாசிப்பருப்பு – 1/4 கப்
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பில்லை – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- தேங்காய்துருவல் – 1/2 கப்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 2 கப்
செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு சுழியம் செய்வது எப்படி தெரியுமா
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் ஒரு குக்கரில் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 கப் பாசிப்பருப்பு மற்றும் 1 1/2 கப் தண்ணீரை சேர்த்து 2 விசில் வைத்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை நன்கு மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து அதில் 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு, சிறிதளவு கருவேப்பில்லை மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அது நன்கு வதங்கியவுடன் 1 வெங்காயம் மற்றும் 1 தக்காளியை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் 1 கப் சுண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை செய்வது எப்படி
ஸ்டேப் – 4
பின்னர் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் 1/2 கப் தண்ணீரை சேர்த்து நன்கு வேகவிடுங்கள். பிறகு அதில் நாம் முன்னரே வேகவைத்து மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 5
அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 1/2 கப் தேங்காய்துருவல், 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொதித்து கொண்டிருக்கும் கூட்டுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
இறுதியாக அதன் மீது சிறிதளவு கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கி தூவி இறக்கினீர்கள் என்றால் நமது சுவையான சுண்டக்காய் கூட்டு தயார் ஆகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை செய்வது எப்படி தெரியுமா
பீர்க்கங்காய் துவையலை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க நாக்கிலிருந்து சுவை நீங்கவே நீங்காது
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |