சுண்டைக்காய் துவையலானு ஆச்சரியப்படாம எப்படி செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க..!

Advertisement

Sundakkai Thuvaiyal in Tamil

ஒரு சிலருக்கு வீட்டில் சாப்பிடுவதற்கு எத்தனை விதமான பொரியல், வறுவல் மற்றும் கிரேவி என இவை அனைத்தும் செய்து இருந்தாலும் கூட துவையல் இருந்தால் தான் சாப்பாடு சாப்பிட மாதிரி இருக்கிறது என்று திருப்தி வரும் என்று கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் உளுந்து துவையல், பிரண்டை, எள்ளு, பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி என பல வகையான துவையல் ரெசிபிக்களை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் அதிகமாக சுண்டைக்காய் துவையல் யாரும் சாப்பிட்டு இருக்க வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான். அதனால் இன்று எப்போதும் வீட்டில் குழம்பு, வறுவல் என செய்யும் சுண்டைக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

துவையல் ரெசிபி:

  1. சுண்டைக்காய்- 70 கிராம்
  2. துருவிய தேங்காய்- 1/4 கப்
  3. புளி- சிறிதளவு
  4. பூண்டு- 5 பல்
  5. உளுத்தம் பருப்பு- 3 ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய்- 10
  7.  உப்பு- தேவையான அளவு
  8. எண்ணெய்- தேவையான அளவு

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை

சுண்டைக்காய் துவையல் செய்வது எப்படி..?

முதலில் துவையளுக்கு எடுத்து வைத்துள்ள சுண்டைக்காயில் இருக்கும் காம்பினை நீக்க வேண்டும். அதன் பிறகு அதனை நன்றாக தரையில் அல்லது ஒரு பேப்பரில் போட்டு ஒன்று, இரண்டாக நசுக்கி கொள்ளவும்.

அடுத்து நசுக்கி வைத்துள்ள சுண்டக்காயினை நன்றாக வதக்கி ஒரு பவுலில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

sundakkai thuvaiyal seivathu eppadi

பின்பு இந்த சுண்டைக்காயை தண்ணீரில் அலசி தனியாக வைத்து விட வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெயினை காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்த பிறகு அதில் 10 காய்ந்த மிளகாய், 5 பூண்டு பல், சிறிதளவு புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

பின்பு 5 நிமிடம் கழித்து கடாயில் உள்ள பொருளுடன் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வரை வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.

 சுண்டைக்காய் துவையல் செய்வது எப்படி

கடைசியாக வதக்கிய சுண்டைக்காய் மற்றும் ஆறிய பொருட்கள் அனைத்தினையும்  மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள். துவையல் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு இல்லாமல் கொரகொரப்பாக இருக்க வேண்டும்.

அவ்வளவு தான் தயார் செய்து வைத்துள்ள சுண்டைக்காய் துவையலை இட்லி, தோசை மற்றும் சாதம் என இவை அனைத்திற்கும் தொட்டு சாப்பிடுங்கள்.

செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement