கசப்பே தெரியாமல் சுண்டைக்காய் வறுவல் எப்படி செய்யணுமுன்னு தெரியுமா.?

Advertisement

சுண்டைக்காய் வறுவல் எப்படி செய்வது.?

சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது என்று அனைவரும் அறிந்தது. இதனை நாம் எப்படி சமைத்து சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் இதனை பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது. ஏனென்றால் கசப்பு தன்மை வாய்ந்தது. அதனால் தான் இந்த பதிவில் எல்லாரும் விரும்பும் வகையில் சுண்டைக்காயை கசப்பு தன்மை இல்லாமல் வறுக்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுண்டைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: 

  1. சுண்டைக்காய்- 250 கிராம்
  2. எண்ணெய்- 2 தேக்கரண்டி
  3. பெருஞ்சீரகம்- சிறிதளவு
  4. சின்ன வெங்காயம்- 10
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி
  6. தக்காளி- 1
  7. மஞ்சள் தூள்-1/4தேக்கரண்டி
  8. மல்லி தூள்- 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
  10. உப்பு- தேவையான அளவு

செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை

சுண்டைக்காய் வறுவல் செய்முறை:

 சுண்டைக்காய் வறுவல் எப்படி செய்வது

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி கொள்ளவும். அடுத்து கடாய் வைத்து அதில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கொள்ளவும். பின் அதில் பெருஞ்சீரகம் சிறிதளவு, சின்ன வெங்காயம் 10 நறுக்கியது சேர்த்து வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் சுருங்கிய பதம் வந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கி கொள்ளவும். தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு நறுக்கி வைத்த சுண்டைக்காயை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, 1/2 மல்லி தூள், சீரக தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி, உப்பு தேவையான ளவு சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பிறகு

அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சுண்டைக்காயை வேக விடவும். தண்ணீரெல்லாம் இஞ்சிய பிறகு சிறிதளவு எண்ணெய் சேர்த்து மொருவலாக வறுத்து கொள்ளவும்.

செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement