Suraikai Adai Dosa Recipe
உணவு என்பதை நாம் மூன்று எழுத்துக்களில் கூறினாலும் கூட அது மூவாயிரத்திற்கு மேற்பட்ட வகைகளை கொண்டிருக்கிறது. அந்த வகையில் தினமும் நாம் ஒவ்வொரு வகையான சாப்பாட்டினை சாப்பிட்டாலும் கூட அடை பிரியர்கள் என்று இன்னுமும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இத்தகைய அடை தோசையில் முருங்கைக்கீரை அடை, கிழங்கு, கேழ்வரகு, முட்டை மற்றும் கார அடை என பல வகைகள் உள்ளது. இத்தகைய அடைகளை எல்லாம் நாம் வீடுகளில் செய்து சாப்பிடவில்லை என்றாலும் கூட ஹோட்டலில் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்படி இருக்கும் பட்சத்தில் இன்றைய பதிவில் அடை பிரியர்களுக்கு பிடித்தமான சுரைக்காய் அடை தோசை செய்வது எப்படி என்பதை தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து பிடித்து சுரைக்காயில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அடை தோசைக்கு தேவையான பொருட்கள்:
- சுரைக்காய்- 1
- பெரிய வெங்காயம்- 7
- அரிசி- 1/2 கிலோ
- காய்ந்த மிளகாய்- 10
- சோம்பு- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
சுண்டைக்காய் துவையலானு ஆச்சரியப்படாம எப்படி செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க..
சுரைக்காய் அடை எப்படி செய்வது..?
முதலில் எடுத்துவைத்துள்ள 1/2 கிலோ புழுங்கல் அரிசியினை 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீர் ஊற வைத்து விட வேண்டும். அதன் பிறகு 7 பெரிய வெந்தயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு எடுத்துவைத்துள்ள சுரைக்காயினை 4 துண்டாக நறுக்கி கொண்டு அதன் உள்ளெ இருக்கும் தோலினை எல்லாம் நீக்கி விட வேண்டும். அடுத்து அந்த சுரக்காயினை நடுத்தரமான அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
4 மணி நேரம் கழித்து ஊறவைத்துள்ள அரிசினை சுத்தம் செய்து விடுங்கள். இப்போது மாவு ஆட்டும் கிரைண்டரில் கழுவி வைத்துள்ள அரிசி, சோம்பு 1 ஸ்பூன் மற்றும் காய்ந்த மிளகாய் 10 சேர்த்து அதனுடன் தண்ணீரும் சேர்த்து மாவினை கிரைண்டரில் ஓட விடுங்கள்.
அடுத்து கிரைண்டரில் உள்ள மாவு கொஞ்சம் கொரகொரப்பாக வந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயினை சேர்த்து சிறிது நேரம் மாவினை ஓட விட்டு பின்பு மாவினை ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.
இப்போது அரைத்துவைத்துள்ள மாவில் தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் மற்றும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மாவினை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது சுரைக்காய் அடை செய்ய மாவு தயார்.
கடைசியாக அடுப்பில் தோசை கல்லினை சேர்த்து அதில் எண்ணெய் விட்டு தயார் செய்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டியை அதில் அடை போல் ஊற்றி அடைக்கு எண்ணெய் ஊற்றி அடையை திருப்பி போட்டு பொன் நிறமாக வந்தவுடன் எடுத்தால் போதும் மொறுவலான சுரைக்காய் அடை தயார்.
இப்போது செய்த முறையை போல மற்ற மாவினையும் ஊற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க இது மாதிரி நீங்களும் இன்னைக்கு நைட் இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்க.
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |