ஹோம் மேட் தந்தூரி மசாலா ஸ்பைசஸ் தயார் செய்யும் முறை..!

Advertisement

Tandoori Masala Powder Recipe in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அருமையான ஹோம் மேட் மசாலா ஸ்பைசஸ் தயார் செய்யும் முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அசைவ பிரியர்களுக்கு தந்தூரி சிக்கன் என்பது மிகவும் பிடித்த உணவாகும். இதனை சாப்பிடிக்குவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இருந்தாலும் இதனை பெருமபலனவர்கள் கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவார்கள். இந்த தந்தூரி சிக்கன் செய்வதற்கு நாம் வீட்டிலேயே தந்தூரி மசாலா பவுடர் தயார் செய்ய தெரிந்துகொண்டோம் என்றாலே போதும் மிகவும் சுவையாக செய்துவிடலாம். சரி வாங்க இந்த தந்தூரி மசாலா ஸ்பைசஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்களை:

  1. சீரகம் – இரண்டு ஸ்பூன்
  2. மல்லி – இரண்டு ஸ்பூன்
  3. சோம்பு – ஒரு ஸ்பூன்
  4. பட்டை – நான்கு
  5. ஏலக்காய் – 10 முதல் 15
  6. கருப்பு ஏலக்காய் – மூன்று
  7. கிராம்பு – ஒரு ஸ்பூன்
  8. மிளகு – ஒரு ஸ்பூன்
  9. நட்சத்திர சோம்பு – ஓன்று
  10. ஜாதிபத்திரி – இரண்டு
  11. காய்ந்த இஞ்சி – நான்கு துண்டுகள்
  12. வரமிளகாய் – 8
  13. காஸ்மீரி மிளகாய் – 6
  14. கஸ்துரி மேதி – ஒரு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொத்தமல்லியும் கறிவேப்பிலையும் இருந்தா போதும்.. நாவில் எச்சில் ஊரும் சுவையில் சட்னி ரெடி..!

தந்தூரி மசாலா ஸ்பைசஸ் தயார் செய்யும் முறை:Tandoori Masala Powder

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் இரண்டு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மல்லி, ஒரு ஸ்பூன் சோம்பு இவை அனைத்தையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிஷம் வதக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அதனை ஒரு சுத்தமான பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அதே வாணலியில் பட்டை – நான்கு, ஏலக்காய் – 10 முதல் 15, கருப்பு ஏலக்காய் – மூன்று, கிராம்பு – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், நட்சத்திர சோம்பு – ஓன்று, ஜாதிபத்திரி – இரண்டு, காய்ந்த இஞ்சி – நான்கு துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். ஐந்து நிமிடம் கழித்து தனை ஒரு சுத்தமான பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 3

பின்பு அதே வாணலியில் வரமிளகாய் – 8, காஸ்மீரி மிளகாய் – 6 இவை இரண்டியும் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும்.

ஸ்டேப்: 4

இவ்வாறு வதக்கிய பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறும் வரை காத்திருங்கள், இந்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பவுடராக ஒரு முறை அரைக்கவும், பின் அதனுடன் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மீதி சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் தந்தூரி மசாலா தயார் இவ்வாறு தயார் செய்த தந்தூரி மசாலாவை , இந்த தந்தூரி மசாலாவை பயன்படுத்தி ஒரு முறை உங்கள் வீட்டில் தந்தூரி சிக்கன் செய்து பாருங்கள் நல்ல சுவையாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் தக்காளி, வெங்காயம் இருந்தால் போதும் சுவை தரும் சட்னி 10 நிமிடத்தில் தயார்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement