Thakkali Chutney Seivathu Eppadi Tamil
இட்லி தோசை என்றாலே அனைவருக்கும் சட்னி வகைகள் தான் நினைவுக்கு வரும். ஏன் அனைவருடைய வீடுகளிலும் இதனை தான் ஓவ்வொரு நாளும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இட்லி தோசைக்கு சைடிஷாக வெங்காய சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, காரா சட்னி மற்றும் புதினா சட்னி என ஒரே மாதிரியான ரெசிபியை தான் செய்வார்கள். இவ்வாறு என்ன தான் பல வகையான சட்னி ரெசிபிகள் இருந்தாலும் கூட தக்காளி சட்னி தான் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் தக்காளி சட்னி என்றால் எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் வைக்க தெரியும். ஆனால் தக்காளி சட்னியிலும் பல வகைகள் இருக்கிறது. ஆகவே அதில் ஒரு வகையாக இன்று தக்காளி வித் வெங்காயம் வைத்து செய்யக்கூடிய ஒரு சட்னி ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இட்லி தோசைக்கு தக்காளி சட்னி:
பொருட்களின் பெயர் | பொருட்களின் அளவுகள் |
தக்காளி | 1/2 கிலோ |
பெரிய வெங்காயம் | 4 |
காய்ந்த மிளகாய் | 2 |
கடுகு | 1/2 ஸ்பூன் |
மிளகாய் தூள் | 2 ஸ்பூன் |
தோசை மாவு | 2 ஸ்பூன் |
உப்பு | தேவையான அளவு |
எண்ணெய் | தேவையான அளவு |
வெங்காயம் தக்காளி சட்னி செய்முறை:
ஸ்டேப்- 1
முதலில் எடுத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காயத்தை தண்ணீரில் அலசி பின்பு சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கடாயில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் வைத்து நறுக்கிய தக்காளி வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
பின்பு கடாயில் உள்ள தக்காளி மற்றும் வெங்காயம் நன்றாக வெந்த பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு கரண்டியால் நன்றாக மசித்து கொல்லுங்ககள்.
ஸ்டேப்- 3
இப்போது அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் மற்றும் கடுகை சேர்த்து பொறிய விடுங்கள்.
ஸ்டேப்- 4
அதன் பிறகு மசித்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், 2 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். சட்னி நன்றாக கொதித்த பிறகு அதில் 2 ஸ்பூன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு 2 நிமிடம் கழித்து இறக்கினால் போதும் தாறுமான சுவையில் தக்காளி, வெங்காயம் சட்னி தயார்.
குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |