தக்காளி ஊறுகாயை இப்படி செஞ்சா தான் டேஸ்ட் நல்ல இருக்கும்…!

Advertisement

Thakkali Oorugai Seivathu Eppadi

சமையலை பொறுத்தவரை தக்காளிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் இருக்கிறது. ஏனென்றால் எந்த சமையலை சமைத்தாலும் அதில் தக்காளி கண்டிப்பாக தேவைப்படும். தக்காளி இப்படி மட்டும் இல்லாமல் தக்காளி சாதம், சட்னி, தொக்கு, வறுவல் மற்றும் கிரேவி என இதுபோன்ற முறையிலும் செய்து சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி என சாப்பிட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தக்காளி பிரியர்களுக்கு தக்காளியில் எந்த ரெசிபி செய்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் அப்படி சுவைத்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தக்காளியில் ஒரு வித்தியாசமான ரெசிபியினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தக்காளி ஊறுகாய் செய்முறை:

 thakkali oorugai seimurai

 

  • தக்காளி- 1 கிலோ
  • பூண்டு- 15 பல்
  • புளி- எலுமிச்சை அளவு
  • மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
  • வெந்தயம்- 1 1/4 ஸ்பூன்
  • கடுகு- 1 1/2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்-
  • பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி..?

ஸ்டேப்- 1 முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 1 ஸ்பூன் வெந்தயம் மற்றும் கடுகினை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2 இப்போது 1 கிலோ தக்காளியை நன்றாக அலசி விட்டு நறுக்கி வைத்து விடுங்கள். அதேபோல் சிறிதளவு புளிக்கரைசலையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3 அதன் பிறகு ஒரு கடாயில் நறுக்கிட்ட தக்காளியை சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக வேக விடுங்கள்.
ஸ்டேப்- 4 அடுப்பில் உள்ள தக்காளி நன்றாக வெந்த பிறகு அதனுடன் புளி கரைசலையும் சேர்த்து மீண்டும் நன்றாக 20 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள்.
ஸ்டேப்- 5 கடைசியாக அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் 6 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் வெந்தயத்தை பொரிய விடுங்கள்.
ஸ்டேப்- 6 பின்பு கடாயில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள மிளகாய், பூண்டு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 7 2 நிமிடம் கழித்து அரைத்த பொடி மற்றும் தக்காளி பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 8 இதனை தொடர்ந்து ஒரு 5 நிமிடம் அடுப்பில் ஊறுகாயினை வைத்து மீண்டும் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி இறக்கினால் தக்காளி ஊறுகாய் தயார்.

சுலபமான முறையில் முருங்கைக்காய் கார குழம்பு செய்வது எப்படி 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement