அனைவருக்கும் பிடித்த தக்காளி சாம்பார் செய்வது எப்படி..?

thakkali sambar seivathu eppadi

Thakkali Sambar Seivathu Eppadi

பொதுவாக ஒரு வீட்டில் 3 அல்லது 5 நபர்கள் இருந்தால் சமைக்கும் வேலை என்பது அவ்வளவு கடினமாக இருக்காது என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இவ்வாறு சாதாரணமாக கூறினாலும் கூட அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தான் அதனுடைய கடினம் என்பது தெரியும். ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாப்பாட்டினை கேட்டார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் பிடித்த சாப்பாட்டினை சமைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த வகையில் பார்த்தால் சமைக்கும் சாப்பாட்டில் சாம்பார் என்று வந்துவிட்டால் எதுவும் கூறாமல் அப்படியே சாப்பிடுவார்கள். இத்தகைய சாம்பாரில் எண்ணற்ற வகைகள் உள்ளது. அதில் ஒன்றாக இன்று பெருமபாலான நபர்களுக்கு தெரியாத தக்காளி சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

 1. துவரம் பருப்பு- 200 கிராம்
 2. பெரிய தக்காளி- 2
 3. பச்சை மிளகாய்- 4
 4. வெங்காயம்- 1
 5. வெந்தயம்- 1/4 ஸ்பூன்
 6. மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
 7. மல்லித்தூள்- 1 ஸ்பூன்
 8. மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
 9. புளிச்சாறு- தேவையான அளவு
 10. உப்பு- தேவையான அளவு
 11. சமையல் எண்ணெய்- தேவையான அளவு

தேங்காய் தயிர் சட்னி கேட்பதற்கு மட்டும் கிடையாது டேஸ்ட்டிலும் அருமையாக இருக்கும் 

தக்காளி சாம்பார் செய்முறை:

தக்காளி சாம்பார் செய்முறை

முதலில் எடுத்துவைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்றாக தண்ணீரில் அலசி கழுவி வைத்து விட வேண்டும்.

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள துவரம் பருப்பினை தண்ணீரில் அலசி ஒரு  பாத்திரத்தில் சேர்க்கவும். அதன் பிறகு துவரம் பருப்புடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து துவரம் பருப்பினை வேக விட வேண்டும்.

அடுத்து துவரம் பருப்பு வெந்த பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து 5  நிமிடம் வெந்த பிறகு எடுத்துவைத்துள்ள மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் புளி கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

கடைசியாக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொன் நிறமாக வறுத்து கொள்ளுங்கள்.

இப்போது வறுத்த பொருட்களை கொதிக்க வைத்துள்ள சாம்பாரில் சேர்த்து கலந்தால் போதும் தக்காளி சாம்பார் தயார்.

மேலும் இந்த சாம்பார் வைப்பதில் வேறு ஏதேனும் காய்கறிகள் மற்றும் சிறிதளவு தேங்காய் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

கருணைக்கிழங்குல அட்டகாசமான சட்னி அதுவும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil