சப்பாத்திக்கு இப்படி யாரும் தொக்கு செஞ்சு சாப்பிட்ருக்க மாட்டீங்க..

Advertisement

Thakkali Thokku for Chapathi in Tamil

தக்காளி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தக்காளி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட தக்காளி தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். அதிலும் சப்பாத்தி தக்காளி தொக்கு வைத்து சாப்பிட்டால் அதனுடைய ருசி அப்படி இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் சப்பாத்திக்கு ஏற்ற தக்காளி தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம் –1
  2. தக்காளி –1
  3. பூண்டு –10 பற்கள்
  4. நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
  5. உளுத்தப்பருப்பு- 1 தேக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் –1/4  தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள்- 1/4  தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
  9. உப்பு- தேவையான அளவு

கருணைக்கிழங்குல அட்டகாசமான சட்னி அதுவும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க 

தக்காளி தொக்கு செய்முறை:

சப்பாத்திக்கு தக்காளி தொக்கு செய்வது எப்படி

அடுப்பில் கடாய் வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும், அதில் 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் உளுத்தப்பருப்பு, 10 பற்கள் பூண்டு, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு 1/4 ஸ்பூன் பெருங்காய தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், கருவேப்பிலை ஒரு கைப்பிடி சேர்த்து வதக்கவும்.

இந்த அதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். சேர்த்த வெங்காயம், தக்காளி சுருங்கி, எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதை ஒரு கிண்ணத்தில் எடுத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுங்க  அவ்வளவு ருசியா இருக்கும்.

தேங்காய் தயிர் சட்னி கேட்பதற்கு மட்டும் கிடையாது டேஸ்ட்டிலும் அருமையாக இருக்கும் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement