Thanjavur Sambar Recipe in Tamil
உணவில் நிறைய வகைகள் இருந்தாலும், சைவ பிரியர்கள், அசைவ பிரியர்கள் அனைவரும் சாப்பிடும் குழம்பாக சாம்பார் உள்ளது. இந்த சாம்பாரை நாம் வீட்டில் வைத்து சைடிஷாக உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் போதும் அப்படி சாப்பிடுவோம். அது போல கல்யாண வீட்டு சாம்பார் சொல்லவே வேணாம் ருசியோ ருசியாக இருக்கும். எப்படி தான் வைக்கிறார்கள் என்று பலரும் சிந்திப்பீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் தஞ்சாவூர் ஸ்டைல் கல்யாண வீட்டு சாம்பார் வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தஞ்சாவூர் கல்யாண வீட்டு சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
- பருப்பு – 100 கிராம்
- தக்காளி- 1
- சின்ன வெங்காயம்- 10
- கடுகு-1/2 தேக்கரண்டி
- வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள்- சிறிதளவு
- மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
- சாம்பார் பவுடர்- 2 தேக்கரண்டி
- புளி- 50 கிராம்
தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா..?
தஞ்சாவூர் கல்யாண வீட்டு சாம்பார் செய்முறை:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்ததும் வெந்தயம் 1/2 தேக்கரண்டி, சின்ன வெங்காயம் 10 சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட், பரங்கிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளியானது சுருங்கிய பதம் வந்த பிறகு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
பின் அதில் மிளகாய் தூள்சிறிதளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்றாக வேக விடவும்.
காய்கறி வெந்த பிறகு புளி தண்ணீர், மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, சிறிதளவு தண்ணீர், வேக வைத்த பருப்பு போன்றவற்றை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்த பிறகு சாம்பார் பவுடர் 2 தேக்கரண்டி சேர்த்து ஒரு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |