தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா..?

Advertisement

Thanjavur Sambar Powder Recipe 

நாம் சாப்பிடும் சைவம் மற்றும் அசைவ உணவுகளில் என்ன தான் நிறைய உணவுகள் இருந்தாலும் கூட சாம்பார் சாப்பாட்டிற்கு என்று ஒரு தனி கூட்டமே இருக்கிறது. அதாவது சிலருக்கு எத்தனை வகையான சாப்பாடு இருந்தாலும் சாம்பார் சாதம் என்றால் மற்ற அனைத்தினையும் வேண்டாம் என்று கூறிவிடுவார்கள். சாம்பார் சாதம் தானே இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்..? ஆனால் சாம்பாருக்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பாரை வேண்டாம் என்று யாராலும் சொல்லவே முடியாது என்பது தான் உண்மை. இத்தகைய தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பாரை என்ன தான் வீட்டில் பார்த்து பார்த்து வைத்தாலும் கூட அதே ருசி வராது. அதனால் தான் இன்று இந்த சாம்பார் செய்வதற்கு முதலில் சாம்பார் பொடி எப்படி தயார் செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்:

  1. காய்ந்த மிளகாய்- 250 கிராம்
  2. வெந்தயம்- 50 கிராம்
  3. மிளகு- 25 கிராம்
  4. பொட்டுக் கடலை- 50 கிராம்
  5. உளுத்தம் பருப்பு – 50 கிராம்
  6. துவரம் பருப்பு- 50 கிராம்
  7. முழு மல்லி- 500 கிராம்
  8. முழு மஞ்சள்- 100 கிராம்

இன்னைக்கு நைட் இந்த தோசையை செஞ்சு பாருங்க.. அப்புறம் அடிக்கடி செய்வீங்க..

தஞ்சாவூர் சாம்பார் பொடி செய்வது எப்படி..?

thanjavur sambar podi

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெயினை காய விடுங்கள். பின்பு எண்ணெய் காய்ந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுத்த கொள்ளுங்கள்.

பின்பு இதே முறையில் தனித்தனியாக மிளகு, காய்ந்த மிளகாய், மல்லி, பொட்டுக்கடலை, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு என இவை அனைத்தினையும் வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

ஆனால் முழு மஞ்சளை மட்டும் வறுக்கக்கூடாது. அதற்கு பதிலாக வெயிலில் நன்றாக காய வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கடைசியாக வறுத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் காய வைத்து வைத்துள்ள முழு மஞ்சள் என இவை அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து நன்றாக மசாலா பவுடர் அரைக்கும் பதத்திற்கு அரைத்து காய வைத்து விடுங்கள்.

அடுத்து அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடியினை ஆற வைத்து பின்பு காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைத்து விடுங்கள். அவ்வளவு தாங்க தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் வைக்க சாம்பார் பொடி தயார்.

இத்தகைய சாம்பார் பொடியினை நீங்கள் எத்தனை நபருக்கு வைக்கப்போகிறீர்கள் என்பதற்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement