தஞ்சாவூர் ஸ்பெஷல் சோன் பப்டி
சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இனிப்பு வகை என்றால் சொல்லவே வேண்டாம் எல்லோருக்கும் பிடிக்கும். காரம் சாப்பிடாதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் இனிப்பு பிடிக்காமல் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பான ரெசிபியை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம், அப்படி என்ன ரெசிபி என்று தானே யோசிக்கிறீர்கள், இன்றைய சமையல் குறிப்பு பதிவில் தீபாவளிக்கு அனைவருக்கும் பயனுள்ள ஒரு சுவையான ஸ்வீட் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்கள் தீபாவளி வந்தால் அதிரசம், ரவை உருண்டை, பயறு உருண்டை, குலோஜாமுன், லட்டு, தேங்காய் பறை, இனிப்பு சீடை இதுபோன்ற இனிப்பு பலகாரங்களை செய்து இருப்பீர்கள். இனி புதிய வகை ரெசிபியை உங்கள் வீட்டிலே செய்யலாம். சோன் பப்டி அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் வீட்டில் செய்வது கடினம் என்று நினைப்பவர்களுக்காக இந்த பதிவு.சுவையான தஞ்சாவுக்கே ஸ்பெஷல் சோன் பப்டி வீட்டிலே சுவையாக செய்யலாம். வாருங்கள் சோன் பப்டி எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம்.
தஞ்சாவூர் ஸ்பெஷல் சோன் பாப்டி:
தேவையான பொருட்கள்:
நெய் – 360 கிராம்
கடலை மாவு- 90 கிராம்
மைதா – 90 கிராம்
சர்க்கரை-400 கிராம்
தண்ணீர் – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்புன்
எலுமிச்சை சாறு -சிறிதளவு
பிஸ்தா, பாதாம், முந்திரி-1/2 கப்
வெண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
மிதமான வெப்பத்தில் ஒரு பெரிய வாணலியில் நெய்யை முதலில் உருக்கவும்.
உருகிய நெய்யில் கடலை மாவு மற்றும் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். குறைவான வெப்பத்தில், மாவுகள் நெய்யை உறிஞ்சும் வரை கிளறவும்.
பின்னர் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை மாவுகளை கிளறவும்.
8 நிமிடத்திற்கு பிறகு மாவு நன்கு உருகிய பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நேரம் ஆற விடவும்.
மாவு ஆறுவதற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மிதமான சூட்டில் அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி பின்பு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை நன்கு கரையும் வரை குறைத்து 5 முதல் 7 நிமிடம் வரை சக்கரை பாகுவை கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பிறகு அதில் 2 சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதனுடன் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறையும் அதில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
மற்றொரு நான்ஸ்டிக் வாணலியை எடுத்து நெய்யை தேய்க்கவும்
நெய் தடவிய வாணலியில் நாம் தயாரித்து வைத்துள்ள சக்கரை பாகுவை ஊற்றவும்.
சக்கரை பாகுவில் நாம் தயாரித்து வைத்துள்ள மாவுகளை சேர்த்து நன்றாக கிளறவும், கிளறும் போதுதான் மென்மையான சோன் பாப்டி கிடைக்கும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள பிஸ்தா, பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
தஞ்சாவூர் ஸ்டைல் கல்யாண வீட்டு சாம்பார் ஒரு முறை செஞ்சு பாருங்க..
பிறகு ஓரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெயை தடவி அதன் மேல் நீங்கள் தயாரித்து வைத்துள்ள மாவை பரப்பவும்.
பின்பு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை வெட்டி கொள்ளவும். அதன் பிறகு கட் செய்த சோன் பப்டியை பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தாவால் அலங்கரிக்கவும். செம டேஸ்டான தஞ்சாவூர் ஸ்பெஷல் சோன் பப்டி ரெடி.
தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |