தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Thanjavur Special Thavala Vadai Recipe in Tamil

இந்த உலகில் நாம் சுகமாக வாழவேண்டும் என்றால் நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை, உறைவிடம் (வாழ்விடம்) ஆகியவை தான். இவை முன்றும் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால் அவர் நிம்மதியாக வாழ்வார். அதிலும் குறிப்பாக இதில் முதலாவதாக உள்ள உணவு என்பது அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் அனைவருமே உணவின் மீது மிகவும் விருப்பமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் உணவின் மீது மிகவும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அதாவது பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு அதனை செய்து சுவைத்து மகிழுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Thavala Vadai Recipe in Tamil:

Thavala Vadai Recipe in Tami

தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த தவளை வடை ரெசிபிக்கு தேவையான பொருட்களை அறிந்து கொள்வோம்.

  1. புழுங்கல் அரிசி – 1 கப் 
  2. கடலை பருப்பு – 1 கப் 
  3. துவரம் பருப்பு – 1 கப் 
  4. பாசிப்பருப்பு – 1/2 கப் 
  5. உளுத்தம் பருப்பு – 1/2 கப் 
  6. காய்ந்த மிளகாய் – 15
  7. கருவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு
  8. கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
  9. தேங்காய் – 1/2
  10. பெருங்காயம் – 1 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு – 2 டேபிள் ஸ்பூன்
  12. கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  14. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  15. எண்ணெய் – தேவையான அளவு
  16. உப்பு – தேவையான அளவு
  17. தண்ணீர் – தேவையான அளவு

பாலக் பன்னீர் தோசை செய்வது எப்படி

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் புழுங்கல் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 2 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அதேபோல் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் கடலை பருப்பு, 1 கப் துவரம் பருப்பு, 1/2 கப் பாசிப்பருப்பு மற்றும் 1/2 கப் உளுத்தம் பருப்பு ஆகியவற்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 2 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு நாம் ஊறவைத்துள்ள அனைத்தையும் ஒரு கிரெண்டரில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 15 காய்ந்த மிளகாயையும் சேர்த்து வடை மாவு பதத்திற்கு அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

பீர்க்கங்காய் துவையலை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க நாக்கிலிருந்து சுவை நீங்கவே நீங்காது

ஸ்டேப் – 4

பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 1/2 தேங்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அதேபோல் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பில்லை மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சேர்த்து அதில் 2 டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகு நாம் நறுக்கி வைத்துள்ள தேங்காய், கருவேப்பில்லை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6

Thavala Vadai Recipe Seimurai in Tamil

வதக்கி இதனை நாம் அரைத்து வைத்துள்ள வடை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் கலந்து வைத்துள்ள மாவினை சிறிய சிறிய வடையாக தட்டி போட்டு பொறித்து எடுத்தீர்கள் என்றால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தவளை வடை ரெடி.

வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement