திருவாதிரை களி செய்வது எப்படி.? | Thiruvathirai Kali Recipe in Tamil
மார்கழி மாதத்தில் வரும் பெளர்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசன விழா நடத்தப்படுகிறது. அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜருக்கு இந்த நாளில் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். மேலும் இந்த நன்னாளில் கோவில்களில் கலி தருவார்கள்.
கோவில்களில் மட்டுமில்லாமல் எல்லார் வீட்டிலும் கலி செய்து சாப்பிடுவார்கள். சிறு வயதில் கலி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று கூறி இருப்பார்கள். ஆனால் இப்போது திருமணம் ஆகி வீட்டில் கலி செய்து அவர்களும் சாப்பிடுவார்கள். இந்த கலியானது அவர்களுக்கு செய்ய தெரியாது. இதனை அம்மாவிடம் அல்லது மொபைலில் போட்டு தெரிந்து கொள்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் திருவாதிரை கலி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
மார்கழி திருவாதிரை விரதம் 2025 எப்போது.? | Thiruvathirai Nombu 2025 Date and Time in Tamil
தேர்வையான பொருட்கள்:
- பச்சை அரிசி – 1 கப்
- பாசி பருப்பு – 1/4 கப்
- வெல்லம் – 2 கப்
- நெய்
- முந்திரி
- திராச்சை
- ஏலக்காய் பொடி
திருவாதிரை களி செய்முறை:
- முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் பச்சை அரிசி சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அரிசி கருகாமல் அடுப்பை குறைத்து வைத்து நன்கு வறுக்க வேண்டும். அரிசி வறுத்த பிறகு ஒரு தட்டில் அரிசியை மாற்றி ஆற வைக்க வேண்டும்.
- அதன் பிறகு 1/4 கப் பாசி பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அதேபோல் பருப்பு கருகாமல் நன்கு வறுக்க வேண்டும். பருப்பு வறுத்த பிறகு அதையும் தட்டில் மாற்றி ஆற வைக்க வேண்டும்.
- அரிசியும் பருப்பும் ஆறுன பிறகு மிக்ஸிஜாரில் மாற்றி ரவை மாதிரி கோர கோர என்று அரைக்க வேண்டும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 2 கப் வெல்லம் 1 கப் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு எடுத்து கொள்ளுங்கள். வெல்ல பாகை வடிகட்டி கொள்ளுங்கள்.
- அதன் பிறகு பாத்திரத்தில் வெல்ல பாகை சேர்த்து அதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும். அதன் பிறகு தேங்காய் சேர்க்க வேண்டும்.
- அதன் பிறகு அரைத்து வைத்த அரிசியை சேர்த்து கலக்க வேண்டும். அதன் பிறகு சிறிய அளவு நெய் சேர்த்து கலக்க வேண்டும்.
- அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெய்யில் முந்திரி மற்றும் திராச்சை சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பிறகுவறுத்த முந்திரி திராச்சை மற்றும் ஏலக்காய் பொடி களியுடன் சேர்க்க வேண்டும்.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன..! | Arudra Darisanam Endral Enna In Tamil..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |