Ulli Vada Recipe Kerala in Tamil
பொதுவாக நம்முடைய வீட்டில் மாலை நேரங்களில் எப்போதாவது ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பார்கள். ஸ்னாக்ஸ் என்றால் முதலில் வடை, பஜ்ஜி மற்றும் போண்டா ரெசிபிக்களை தான் செய்வார்கள். அதிலும் குறிப்பாக உளுந்து வடை, பருப்பு வடை, பீட்ரூட் வடை, முட்டை கோஸ் வடை மற்றும் வாழைப்பூ வடை என நிறைய வகையான வடைகளை செய்து சாப்பிட்டு இருப்போம். என்ன தான் நமக்கு தினமும் ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தாலும் கூட வித்தியாசமான ஸ்னாக்ஸ் வகையினை தான் சாப்பிடுவதற்கு ஆசைப்படுவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வித்தியாசமான ரெசிபியான கேரளா ஸ்டைல் உள்ளி வடையினை எப்படி டேஸ்ட் மாறாமல் செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
உள்ளி வடை செய்வது எப்படி..?
- பெரிய வெங்காயம்- 4
- இஞ்சி- சிறிய துண்டு
- பூண்டு- 10 பல்
- பச்சை மிளகாய்- 2
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 1/2 ஸ்பூன்
- கடலை மாவு- 3 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- கொத்தமல்லி- தேவையான அளவு
உள்ளி வடை செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
Recipes👇👇 அவலில் இப்படி ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாமா
உள்ளி வடை செய்முறை:
முதலில் எடுத்துவைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் இஞ்சி இவற்றை எல்லாம் தண்ணீரில் நன்றாக அலசி கொள்ளுங்கள்.
அதன் பிறகு 4 பெரிய வெங்காயத்தை தயிர் பச்சடிக்கு நறுக்குவது போல நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு பச்சை மிளகாயினை சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். அதேபோல் 1/2 ஸ்பூன் சோம்பு, பூண்டு மற்றும் இஞ்சினையும் ஒன்று இரண்டாக நசுக்கி வைத்து விடுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து உங்களுடைய கைகளால் 2 நிமிடம் பிசைந்து கொள்ளுங்கள்.
அடுத்து பாத்திரத்தில் உள்ள வெங்காயத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கையால் பிசைந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் உள்ளி வடை செய்வதற்கு மாவு தயார் ஆகிவிட்டது. அதனால் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயினை வைத்து எண்ணெயினை ஊற்றி கொள்ளுங்கள்.
அடுப்பில் உள்ள எண்ணெய் சூடானதும் அதில் தயார் செய்து வைத்துள்ள மாவினை இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் செய்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக வந்தவுடன் எடுத்து விடுங்கள்.
இத்தகைய முறையில் மற்ற மாவினையும் செய்து கொள்ளுங்கள். சுவை மாறாமல் கேரளா ஸ்டைல் உள்ளி வடை தயார். ஈவ்னிங் நேரத்தில் இத்தகைய முறையில் உள்ளி வடை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |