இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸை உங்க குழந்தைக்கு செஞ்சி கொடுங்க..! அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்..!

Unique Snacks Recipe in Tamil

ஹலோ நண்பர்களே..! பெரும்பாலும் நாமும் சரி நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளும் சரி தினமும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் நம்மில் பலரும் குழந்தைகளுக்கு வடை, போண்டா அல்லது பஜ்ஜி, மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ்களை வாங்கி தருவோம். அல்லது வீட்டில் செய்து தருவோம். ஆனால் இந்த ஒரு ஸ்நாக்ஸை யாருமே செய்திருக்க மாட்டார்கள். இந்த ரெசிபிக்கு முன்னால் மற்ற ஸ்நாக்ஸ் எல்லாம் தோற்றுப்போகும். அப்படி இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்..! ஒரு முறை இந்த ஸ்நாக்ஸை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். தினமும் செய்து கொடுக்க சொல்லி அடம்பிடிப்பார்கள். சரி வாங்க நண்பர்களே இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Unique Snacks Recipe in Tamil:

New Snacks Recipe

  1. மைதா மாவு – 1 கப்
  2. வெங்காயம் – 2
  3. கேரட் –
  4. உருளைகிழங்கு –
  5. பச்சை பட்டாணி – 1 கப்
  6. பச்சை மிளகாய் –
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  8. தக்காளி –
  9. சீராக தூள் – 1 ஸ்பூன்
  10. கரமசாலா – 1 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  12. கொத்தமல்லி – சிறிதளவு
  13. உப்பு – தேவையான அளவு
  14. எண்ணெய் – தேவையான அளவு
மட்டனில் கிரேவி செய்து சாப்பிட்ருப்பீர்கள்.. ஆனால் இந்த மாதிரி குருமா செய்து சாப்பிட்ருக்கீர்களா

மைதா மாவு எடுத்து கொள்ளவும்: 

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 கப் அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும். 20 நிமிடம் வரை அப்படியே மூடி வையுங்கள்.

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பச்சை பட்டாணி பச்சை மிளகாய் மற்றும் தக்காளி இவற்றை நறுக்கி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மூடி வதக்க வேண்டும். பின் அதில் மிளகாய் தூள், சீராக தூள் மற்றும் கரமசாலா சேர்த்து வதக்கி 10 நிமிடம் வரை மூடி வையுங்கள். இறுதியாக கொத்தமல்லி போட்டு இறக்கி விடுங்கள்.

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க

மாவு பிசைய வேண்டும்:

மாவு பிசைய வேண்டும்

பின் நாம் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சப்பாத்தி போல தேய்த்து கொள்ள வேண்டும். பின் ஒரு தோசை கல்லில் நாம் தேய்த்து வைத்துள்ளதை ஒன்றாக போட்டு எடுத்து கொள்ளுங்கள். அதாவது மேல் படத்தில் உள்ளது போல செய்ய வேண்டும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் 2 அளவிற்கு மைதா மாவு எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

சப்பாத்தியை நறுக்கி கொள்ள வேண்டும். 

பிறகு நாம் செய்து வைத்துள்ள சப்பாத்தியை நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து படத்தில் இருப்பது போல செய்து கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் நாம் தயார் செய்து வைத்துள்ளதை போட வேண்டும். பிரட்டி போட்டு நன்றாக வெந்ததும் எடுத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் ஸ்நாக்ஸ் ரெடி. நீங்களும் இதுபோல செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal