Urulaikilangu Sadam Seivathu Eppadi Tamil
காய்கறிகளில் எது பிடிக்கிறதோ இல்லையோ, ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. வாரத்திற்கு 1 நாள் இல்லாமல் தினமும் உருளைக்கிழங்கு செய்து கொடுத்தாலும் அதனை வேண்டாம் என்று மறுக்காமல் விருப்பப்பட்டு சாப்பிடுபவர்கள் தான் அதிகம். இவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கில் குருமா, வறுவல், பொறியல், கறி மற்றும் குழம்பு வகைகள் என இது மாதிரியான ரெசிபியை மட்டுமே செய்ய முடியும். அதனால் இன்று இவை இல்லாமல் கொஞ்சம் வித்தியமான முறையில் மதிய லன்ச் ரெசிபியாக உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள் |
செய்முறை விளக்கம் |
கடுகு- 1/2 ஸ்பூன் |
முதலில் அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து இந்த 3 பொருளையும் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை பொறிய விடுங்கள். |
சீரகம்- 1/2 ஸ்பூன் |
காய்ந்த மிளகாய்- 2 |
கிராம்பு- 3 |
2 நிமிடம் கழித்து கடாயில் உள்ள பொருளுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் என இவை எல்லாம் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வறுத்து கொள்ள வேண்டும். |
பட்டை- 1 |
ஏலக்காய்- 2 |
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் |
வெங்காயம்- 1 |
இப்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என அனைத்தையும் கடாயில் உள்ள பொருளுடன் சேர்த்து நன்றாக வதக்கி கொண்டே இருங்கள். |
உருளைக்கிழங்கு- 3 |
உப்பு- தேவையான அளவு |
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் |
உருளைக்கிழங்கு நன்றாக வெந்த பிறகு எடுத்து வைத்துள்ள மசாலா பொருளை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வரை கலந்து கொண்டே இருங்கள். |
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் |
மல்லித்தூள்- 1 ஸ்பூன் |
வேக வைத்த சாதம்- 2 கப் |
கடைசியாக 2 கப் வேக வைத்த சாதம் மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். |
உருளைக்கிழங்கு சாதம் ரெடி |
பின்பு அடுப்பில் இருந்து இறக்கி உருளைக்கிழங்கு சாதத்தை சுவைத்து பாருங்கள். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |