புரட்டாசில மட்டன் கோலா உருண்டை சாப்புட முடியலயா..? அப்போ வாங்க அதே டேஸ்ட்ல வெஜ் கோலா உருண்டை செய்யலாம்..!

valaipoo kola urundai recipe in tamil

Valaipoo Kola Urundai Recipe in Tamil

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் இரண்டு தான் உள்ளது. அதாவது ஒன்று சைவ சாப்பாடு மற்றொன்று அசைவ சாப்பாடு. அந்த வகையில் அசைவ சாப்பாட்டினை நாம் வாரம் முழுவதும் சாப்பிடவில்லை என்றாலும் கூட வாரத்திற்கு ஒரு முறை என விடுமுறை நாட்களில் குடும்பத்தில் உள்ளவர்களிட மகிழ்ச்சியாக பேசி சிரித்துக் கொண்டே சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக மட்டன் இல்லாத அசைவ சாப்பாடு என்பது இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. ஒரு சிலருக்கு மட்டன் கோலா உருண்டை தான் பிடிக்கும். அதனால் வாரத்திற்கு ஒரு நாள் என்ன செய்கிறார்களோ இல்லையா ஆனால் மட்டன் கோலா உருண்டை மட்டும் தவறாமல் செய்து விடுவார்கள். ஆனால் இப்போது புரட்டாசி மாதம் பிறந்த காரணத்தினால் அசைவ உணவு சாப்பிட முடியாது. அதனால் இன்று மட்டன் கோலா உருண்டைக்கே ஈடு கொடுக்கும் அளவிற்க்கு சுவையான வாழைப்பூ கோலா உருண்டை எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாழைப்பூ கோலா உருண்டை:

 வாழைப்பூ கோலா உருண்டை செய்வது எப்படி

  1. வாழைப்பூ- 1
  2. சின்ன வெங்காயம்- 10 
  3. கடலை பருப்பு- 1 ஸ்பூன்
  4. புழுங்கல் அரிசி- 1 ஸ்பூன்
  5. துருவிய தேங்காய்- சிறிதளவு
  6. சோம்பு- 1 ஸ்பூன்
  7. பூண்டு- 5 பல்
  8. காய்ந்த மிளகாய்- 5
  9. பட்டை- 2
  10. உப்பு- தேவையான அளவு
  11. எண்ணெய்- தேவையான அளவு

வாழைப்பூ கோலா உருண்டை செய்வது எப்படி..?

ஸ்டேப்- 1 முதலில் எடுத்துவைத்துள்ள வாழைப்பூவினை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2 அதன் பிறகு மிக்சி ஜாரில் நறுக்கிய வாழைப்பூ, 1 ஸ்பூன் அரிசி மற்றும் கடலை பருப்பினை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3 இப்போது அதே மிக்சி ஜாரில் உள்ள பொருளுடன் துருவிய தேங்காய், 5 காய்ந்த மிளகாய், சோம்பு என இவை அனைத்தினையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4 அடுத்து அரைத்த வைத்துள்ள பேஸ்ட்டினை ஒரு பவுலில் சேர்த்து அதற்கு தேவையான அளவு சால்ட் உப்பு சேர்த்து நன்றாக கைகளால் மாவினை பிசைந்து விடுங்கள்.
ஸ்டேப்- 5 கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யினை காய விடுங்கள்.
ஸ்டேப்- 6 கடாயில் உள்ள எண்ணெய் காய்ந்த பிறகு தயார் செய்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணையில் போட்டு பொன் நிறமாக வரும் வரை வேக விடுங்கள்.
ஸ்டேப்- 7 இத்தகைய முறையில் மற்ற மாவினையும் செய்து எடுத்தால் சூடான வாழைப்பூ கோலா உருண்டை தயார்.
ஸ்டேப்- 8 புரட்டாசில மட்டன் கோலாவுக்கு பதிலா இந்த வாழைப்பூ கோலா உருண்டை செஞ்சு சாப்பிடுங்க டேஸ்ட்-ஆ இருக்கும்.

புரட்டாசி வந்துடுச்சு கறி குழம்பு சாப்பிடணும் போல இருக்கா.! அப்போ இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil