Valaipoo Kootu Seivathu Eppadi
வீட்டில் வாழைப்பூவில் எந்த ரெசிபியை செய்து கொடுத்தாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என யாரும் அந்த அளவிற்கு அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால் வாழைப்பூ என்றாலே கசக்கும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஆழமாக பதிந்து விட்டது. ஆகையால் நாம் எவ்வளவு கட்டாயப்படுத்தி சாப்பிட சொன்னாலும் சாப்பிட மறுக்க தான் செய்வார்கள். இனி உங்களுக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள் எதுவும் இருக்காது. ஏனென்றால் இன்று அனைவருக்கும் பிடித்த வகையில் வாழைப்பூ கூட்டு செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
வாழைப்பூ கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- வாழைப்பூ- 1
- சின்ன வெங்காயம்- 8
- பச்சை மிளகாய்- 2
- தக்காளி- 2
- பாசிப்பருப்பு- 1/4 கப்
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- கடுகு- 1/2 ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு- 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- தேங்காய்- 3 ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பீட்ரூட் இருக்கிறதா? உடனே இந்த பீட்ரூட் அல்வா செய்து பாருங்கள்
வாழைப்பூ கூட்டு செய்முறை:
முதலில் 1 வாழைப்பூவினை நன்றாக சுத்தம் செய்து அதன் உள்ளே இருப்பதை எல்லாம் அகற்றி விட்டு சிறியதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நறுக்கிய வாழைப்பூவினை நீரில் அலசி வைத்து விடுங்கள்.
அதன் பிறகு எடுத்துவைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் சோம்பினை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள். அதேபோல் பச்சை மிளகாய், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயில் தேவையான தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பை பொரிய விடுங்கள். பின்பு பச்சை மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து கடாயில் உள்ள பொருளுடன் நறுக்கிய வாழைப்பூ, பாசிப்பருப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடுங்கள்.
கடைசியாக வாழைப்பூ நன்றாக வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காவையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் போதும் மனம் வீசக்கூடிய வாழைப்பூ கூட்டு தயார்.
இவ்வாறு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள வாழைப்பூ கூட்டினை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் புளிக்குழம்பு வைத்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்.
இட்லி மாவு இருந்தால் உடனே இந்த மொறு மொறு போண்டா செய்து அசத்துங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |