வாழைப்பூ பொடிமாஸ் செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Valaipoo Recipe in Tamil

நாம் அனைவருமே இந்த உலகில் நன்கு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு மிகவும் உதவுவது உணவுகள் தான். அப்படி நமது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள மறுப்பார்கள். அதிலும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிடுவார்கள். அப்படி அவர்களால் ஒதுக்கப்படும் பல உணவுகளில் ஒன்று தான் இந்த வாழைப்பூ. அதனால் தான் இன்றைய பதிவில் வாழைப்பூவை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வாழைப்பூ பொடிமாஸ் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Banana Flower Recipe in Tamil:

Banana Flower Recipe in Tamil

பொதுவாக குழந்தை தங்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவார்கள். குழந்தைகள் என்ன ஒரு சில பெரியவர்களே தங்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அவ்வளவாக அதை சாப்பிட விரும்ப மாட்டார்கள்.

அப்படி பலரால் ஒதுக்கப்படும் உணவு தான் இந்த வாழைப்பூ. அதனால் தான் இந்த வாழைப்பூவை பயன்படுத்தி வாழைப்பூ பொடிமாஸ் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பூ – 1
  2. துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
  3. கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
  4. பெருஞ்சீரகம் விதை – 1/2 டீஸ்பூன்
  5. வெங்காயம் – 1
  6. துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்
  7. எண்ணெய் – 2 டீஸ்பூன்
  8. சீரகம் – 1 டீஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் – 2
  11. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  12. மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  14. உப்பு – தேவையான அளவு 
  15. தண்ணீர் – தேவையான அளவு 

செய்முறை:

ஸ்டேப் – 1 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 டீஸ்பூன் துவரம் பருப்பு மற்றும் 2 டீஸ்பூன் கடலை பருப்பு ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 1 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊறவைத்துள்ள 3 டீஸ்பூன் துவரம் பருப்பு மற்றும் 2 டீஸ்பூன் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடனே 1 சிவப்பு மிளகாய், 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/4 மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு நாம் அரித்த அந்த கலவையை இட்லி வேகவைக்கும் பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பச்சைமிளகாய் ஊறுகாயை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க..! சுவை நாக்கைவிட்டு நீங்காது

ஸ்டேப் – 4

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்யை சேர்த்து அதனுடன் 1/2 டீஸ்பூன் சீரகம், 1 சிவப்பு மிளகாய், 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

அதனுடனே 1 வெங்காயம் மற்றும் 1 வாழைப்பூ ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வேகவிடுங்கள். பின்னர் அதனுடன் 1/4 மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 3 டீஸ்பூன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6 

Vazhaipoo recipe in tamil

இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள துவரம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான வாழைப்பூ பொடிமாஸ் தயாராகிவிட்டது.

வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இதனை உங்க வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

முருங்கைக்காயை ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து போய்ட்டா அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement