Vazhaipoo Vadai Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வடைகளில் ஒன்றான வாழைப்பூ வடை எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. வாழைப்பூவில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி தெரிந்தும் கூட இதனை நாம் உணவில் சேர்த்து கொள்ள மாட்டோம். ஆனால் வாழைப்பூவில் வடை செய்து கொடுத்தால் அனைவருமே இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவிற்கு சூப்பராக இருக்கும். எனவே நீங்களும் வீட்டில் சுவையான மொறுமொறுப்பான வாழைப்பூ வடை எப்படி செய்வது என்பதனை தெரிந்து கொண்டு செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Valaipoo Vadai Seivathu Eppadi:
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
- உப்பு – சுவைக்கேற்ப
- கடலை பருப்பு – 1/4 கப்
- துவரம் பருப்பு – 1/4 கப்
- காய்ந்த மிளகாய் – 6
- வாழைப்பூ – 1/2 கப்
- சோம்பு – 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 8
- பூண்டு – 4
- கறிவேப்பிலை – 2 கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
வாழைப்பூவில் பக்கோடா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க
Valaipoo Vadai Seimurai:
ஸ்டேப் -1
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதனை மோரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சேர்த்து 20 நிமிடம் வரை ஊறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
பருப்புகள் நன்றாக ஊறியதும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அதன் பிறகு, மீண்டும் மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
இப்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த பருப்புகள், மசாலா பொருட்கள் மற்றும் ஊறவைத்துள்ள வாழைப்பூ ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
இறுதியாக, ஒரு அடுப்பில் ஒரு வாணலை வைத்து வடை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவினை வடையாக தட்டி எண்ணெய்யில் போட்டு நன்கு சிவற விட்டு பொரித்து எடுங்கள். அவ்வளவு தாங்க.. சூப்பரான சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை தயார்.!
மீன் குழம்பு சுவையில் சுவையான வாழைப்பூ குழம்பு…
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |