Vanjaram Fish Kola Urundai Recipe in Tamil
நாம் அனைவருமே இந்த உலகில் நன்கு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு மிகவும் உதவுவது உணவுகள் தான். அப்படி நமது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள மறுப்பார்கள். அதிலும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிடுவார்கள். அப்படி அவர்களால் ஒதுக்கப்படும் பல உணவுகளில் ஒன்று தான் இந்த மீன் வகை உணவுகளும் ஒன்றும். அதனால் தான் இன்றைய பதிவில் வஞ்சரம் மீன் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கோலா உருண்டை செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வஞ்சரம் மீன் கோலா உருண்டை செய்வது எப்படி:
பொதுவாக குழந்தை தங்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவார்கள். குழந்தைகள் என்ன ஒரு சில பெரியவர்களே தங்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அவ்வளவாக அதை சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
அப்படி பலரால் ஒதுக்கப்படும் உணவு தான் இந்த மீன் வகை உணவுகள். அதனால் தான் இந்த வஞ்சரம் மீனை பயன்படுத்தி கோலா உருண்டை செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- வஞ்சரம் மீன் – 250 கிராம்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் – 1
- சில்லி பிளக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் – 1 டீஸ்பூன்
- வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்
- பிரட் தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
வாழைப்பூ பொடிமாஸ் செய்வது எப்படி தெரியுமா
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 250 கிராம் வஞ்சரம் மீனை நன்கு சுத்தம் செய்துவிட்டு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு பொடியாக செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய இஞ்சி பூண்டு, 1 நறுக்கிய வெங்காயம் மற்றும் வேகவைத்த வஞ்சரம் மீன் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
பச்சைமிளகாய் ஊறுகாயை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்க சுவை நாக்கைவிட்டு நீங்காது
ஸ்டேப் – 3
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சில்லி பிளக்ஸ், 1 டீஸ்பூன் மிளகு தூள், 1 வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சோளமாவுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு எடுத்து அதனை நாம் எடுத்து வைத்துள்ள பிரட் தூளில் போட்டு புரட்டி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நாம் தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொறித்து எடுத்தால் நமது சுவையான வஞ்சரம் மீன் கோலா உருண்டை தயார்.
வாங்க சுவைக்கலாம்.. நீங்களும் இதனை உங்க வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
முருங்கைக்காயை ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து போய்ட்டா அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |