வஞ்சிரம் மீன் வறுவல்
புரட்டாசி மாதம் விரதம் முடிந்து நாளைக்கு ஐப்பசி 1 பிறக்க போகிறது. ஒரு மாதமா அசைவம் சாப்பிடாமல் இருந்து நாளைக்கு சாப்பிட போகிறோம் குஷியில் இருப்போம். அப்படி முதலில் எடுக்க போவது மீன் தான். ஏனென்றால் வேறு எதுவும் சாப்பிட்டால் அதாவது மட்டன் எடுத்தால் உடல் சூட்டை அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனால் தான் மீனை முதலில் எடுத்து சமைப்போம். அதனால் தான் பதிவில் வித்தியாசமான முறையில் வஞ்சிரம் மீன் வறுவல் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
வஞ்சிரம் மீன் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள் |
வஞ்சிரம் மீன் வறுவல் செய்முறை |
வஞ்சிரம் மீன்- 1/2 கிலோ |
முதலில் வஞ்சிரம் மீனை நைசாக கட் பண்ணி எடுத்து கொள்ளவும். |
மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி |
பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். |
மல்லி தூள் – 1/ 2 தேக்கரண்டி |
அடுத்து ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். |
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி |
பின் அதில் மிளகாய் தூள் 3 தேக்கரண்டி, மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, வெங்காயம் பெருஞ்சீரகம் பேஸ்ட் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். |
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி |
மசாலா கலந்ததும் ஒரு தடவை எல்லா சரியாக உள்ளதா என்று செக் பண்ணி பார்க்கவும். |
எலுமிச்சை சாறு – சிறிதளவு |
எல்லா சரியாக இருந்தால் கட் செய்து வைத்துள்ள மீனை மசாலாவில் சேர்க்கவும். |
சின்ன வெங்காயம் – 3- |
எல்லா பக்கமும் மசாலா இருக்க வேண்டும். மசால் சேர்த்து 1/2 மணி நேரம் அப்படியே ஊறட்டும். |
பெருஞ்சீரகம்- 1/2 தேக்கரண்டி |
1/2 மணி நேரம் கழித்து அடுப்பில் தோசை கல் வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். கல் சூடானதும் பிசறி வைத்துள்ள மீனை சேர்க்கவும். |
தேவையான அளவு உப்பு |
இரு புறமும் நன்றாக வெந்து சிவந்த நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து மீனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பரிமாறலாம். |
வாழைப்பூவில் பக்கோடா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க