வாழைப்பூ குழம்பு
புரட்டாசி மாசம் தொடங்கிடுச்சி, இனி Non-Veg சாப்பிட முடியாதுனு கவலை படுபவர்களுக்கான இந்த பதிவு. நாம் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் உடனே நினைவு வருவது Non- Veg உணவுகள் மட்டும் தான். ஆமாங்க, கார சாரமாக சாப்பிட நினைப்பவரும் Non -Veg உணவுகளையே விரும்புவார்கள். ஆனால் அந்த அசைவ சுவையில் சைவ உணவுகளை இந்த ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் இப்போது இருக்கின்றோம். வாருங்கள் அசைவ சுவையில் செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
செட்டிநாடு சுவையில் வாழைப்பூ குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1
கடலை மாவு – 3/4 கப்
மோர் – 1 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 1/4 கப்
நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காய தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு -10
புளி சாறு. – தேவைக்கேற்ப
தேங்காய் பால் – 1/2 கப்
கொத்தமல்லி, கறிவேப்பிலை
உப்பு – தேவைக்கேற்ப
வாழைப்பூ குழம்பு செய்வது எப்படி?
- முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து, அதனை மோரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் அந்த வாழைப்பூக்களை தனியாக எடுத்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காய தூள், வெங்காயம், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அந்த மாவை வடைக்கு தட்டுவது போல் தயார்செய்து கொள்ளவும்.
- பின்னர் அதனை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.
- இப்போது மற்றோரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, வெந்தயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அதனுடன் மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பச்சை தன்மை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதனுடன் தேங்காய் பால் மற்றும் புளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- எண்ணெய் பிரிந்து வந்த உடன் வறுத்து எடுத்த வாழைப் பூ வடையை குழம்பில் சேர்க்கவும்.
- கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
இப்போது மீன் குழம்பு சுவையில் செட்டிநாடு வாழைப்பூ குழம்பு ரெடி.
மொறு மொறு வெண்டைக்காய் பக்கோடா இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. சாப்பிட்டுக்கிட்டே இருப்பிங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |