Veg Nuggets Recipe in Tamil
பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு புது வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு இந்த ஆசை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சுவையான உணவுகளை தேடி தேடி சென்று சாப்பிடுவார்கள். அப்படி சைவ பிரியர்கள் அனைவராலும் தேடி தேடி சென்று விரும்பி சாப்பிடப்படும் பல வகையான சைவ உணவுகளில் இந்த சைவ Chicken நக்கெட்ஸும் ஓன்று. அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் சைவ Chicken நக்கெட்ஸை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சைவ Chicken நக்கெட்ஸை செய்து சுவைத்து பாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Vegetables Potato Nuggets Recipe in Tamil:
நாம் அனைவருக்குமே நமக்கு மிகவும் பிடித்த ஒரு உணவை நாம் மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்து சுவைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதனால் இன்று அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் சைவ Chicken நக்கெட்ஸை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 3
- முட்டைகோஸ் – 1/2 கப் நறுக்கியது
- கேரட் – 1/2 கப் நறுக்கியது
- பீன்ஸ் – 1/2 கப் நறுக்கியது
- சோளம் – 1/2 கப் நறுக்கியது
- குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
- மிளகாய் செதில்கள் ( Chilli Flakes) – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சாட் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி பூண்டுவிழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
- பிரட் கிராம்ஸ் – 1 கப்
- சீஸ் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
புரட்டாசி வந்துடுச்சு கறி குழம்பு சாப்பிடணும் போல இருக்கா அப்போ இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 உருளைக்கிழங்குகளையும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். பிறகு அதனின் தோல்களை நீக்கிவிட்டு நன்கு மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள நறுக்கிய 1/2 கப் முட்டைகோஸ், 1/2 கப் கேரட், 1/2 கப் பீன்ஸ், 1/2 கப் சோளம், 1/2 கப் குடைமிளகாய், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் செதில்கள் ( Chilli Flakes) மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
தேங்காய் லட்டுவை இப்படி ஒரு முறை செய்து பாருங்க டேஸ்ட் நாவைவிட்டு நீங்காது
ஸ்டேப் – 3
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சாட் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டுவிழுது, 1 கப் பிரட் கிராம்ஸ், 1 கப் சீஸ் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு இந்த கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி அதில் அதனை போட்டு பொறித்து எடுத்தால் நமது சுவையான சைவ Chicken நக்கெட்ஸ் தயார்.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
கோகுலாஷ்டமி ஸ்பெஷல் ஸ்ரீகந்த் இனிப்பு செய்வது எப்படி தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |