veg Roll
பொதுவாக நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அது தினமும் ஒரு புதுமையான உணவினை செய்து சுவைத்து பார்க்க வேண்டும் என்பது தான். அதிலும் குழந்தைகள் சொல்லவே வேண்டாம் தினமும் பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது என்ன புதுமையான ஸ்னாக்ஸ் வைத்திருக்கிறீர்கள் என்பதை கேட்டு கொண்டே தான் வீட்டிற்குள் வருவார்கள். அப்பொழுது அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸை செய்து தரவில்லை என்றால் நம்மை அவர்கள் விடாமல் தொல்லை செய்து கொண்டிருப்பார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ் ஆன வெஜ் ரோல் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
veg Roll Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
கேரட் – 3
உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – 2
பீன்ஸ் – 10
குடை மிளகாய் – 2
தக்காளி – 1
மைதா மாவு – 1 கப்
கோதுமை மாவு -1 கப்
சீரகம் – 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வெஜ் ரோல் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
பின்னர் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு மென்மையாகும் வரை பிசைந்துகொள்ளவும்.
மாவை தயாரித்த பின்னர் சிறிது நேரம் முடி வைக்கவும்.
1 மணி நேரத்திற்கு பின் மாவை சிறிது சிறிது துண்டாக பிரித்து வட்ட வடிவில் உருட்டிக்கொள்ளவும்.
பின்னர் அந்த மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து சப்பாத்தி தயாரித்து கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, அதில் தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக வதக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் எடுத்துவைத்துள்ள காய்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வேக வைக்கவும்.
காய்கறிகள் நன்றாக மசாலாக்கள் சேர்ந்ததும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி சுமார் ஒரு நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
பின்னர் சப்பாத்திகளில் கெட்ச்சப்பை தடவி, அதில் தயாரித்து வைத்துள்ள காய்கறிகளை நடுவில் வைத்து வைத்து உருட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் சத்தான சப்பாத்தி வெஜ் ரோல் தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |