Vendakkai Mor Kulambu
வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு அன்றாடம் குழம்பு செய்வது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் சமைக்கும் சாப்பாட்டை அனைவரும் புகழ்ந்து கூறினால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் குழம்புகள் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகிவிடும். அதனால் சுலபமாக முறையில் வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள் :
- தேங்காய் – 1/4 கப்
- சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 5
- இஞ்சி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3
- தயிர் – 2 கப்
- வெண்டைக்காய் – 1/4 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு குடை மிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிதளவு
- பெருங்காயம் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – போதுமான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
மதியம் என்ன சமைப்பது என்று ஒரே குழப்பமா? 5 நிமிடத்தில் மோர் ரசம் வைத்து அசத்துங்கள்..!
வெண்டைக்காய் மோர் குழம்பு செய்முறை :
ஸ்டெப் : 1
ஒரு மிக்சியை எடுத்து 1/4 கப் தேங்காய், 1/2 சீரகம், 5 வெங்காயம், சின்ன துண்டு இஞ்சி மற்றும் 3 பச்சை மிளகாய் இந்த நான்கு பொருளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். அடுத்ததாக 2 கப் தயிரை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஸ்டெப் : 2
ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு அதனுடன் 1/4 கப் வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு அதன் பச்சை தன்மை மற்றும் பிசுபிசுப்பு தன்மை போகும் வரை நன்றாக வதக்கவும்.
5 நபர்களுக்கு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா..?
ஸ்டெப் : 3
ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். அதில் எண்ணெய், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக பொரிந்தவுடன் பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். குழம்புக்கு தேவையான மஞ்சள் தூள், அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். அதில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
ஸ்டெப்: 4
மோர் குழம்பில் வாசனை வந்தவுடன், வதக்கி வைத்த வெண்டைக்காயை சேர்க்கவும். கடைசியாக தான் தயிரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுப்பை குறைத்து கொஞ்சம் நேரம் கொதிக்க விடவும். மோர் குழம்பு நல்ல கெட்டியாக வந்தவுடன் இறக்கினால் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |