சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி..?

Advertisement

Vendakkai Puli kulambu Seivathu Eppadi

பொதுவாக வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என யாரும் அதிகமாக சத்துள்ள காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள். அதனை நாம் என்ன தான் சமைத்து கொடுத்தாலும் கூட அவற்றை சாப்பிட மறுப்பார்கள். அந்த வகையில் வெண்டைக்காய் ஆனது குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அதிகமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இவ்வாறு நாம் சாப்பிட மறுக்கும் வெண்டைக்காயில் தான் பல வகையான சத்துக்கள் ஆனது நிறைந்து இருக்கிறது. அதனால் இன்று சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயில் சுவையான புளிக்குழம்பு செய்து அசத்துவது என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சமையல் குறிப்பு வெண்டைக்காய் புளிக்குழம்பு:

  1. பிஞ்சு வெண்டைக்காய்- 1/4 கிலோ
  2. தக்காளி- 1
  3. வெங்காயம்- 2
  4. மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
  5. மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
  6. மல்லித்தூள்- 1/4 ஸ்பூன்
  7. வெந்தயம்- 1/2 ஸ்பூன்
  8. புளி- தேவையான அளவு
  9. உப்பு- தேவையான அளவு
  10. எண்ணெய்- தேவையான அளவு

வெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி..?

முதலில் எடுத்துவைத்துள்ள வெண்டைக்காயினை சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். அதேபோல் தக்காளி மற்றும் வெங்காயத்தையும் நறுக்கி வைத்து விடுங்கள்.

வெண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி

இப்போது அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் வெண்டைக்காயை அதில் போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து சிறிதளவு தேங்காயை துருவி அதனுடன் சோம்பு சேர்த்து மிக்சி ஜாரில் தேங்காயை நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வெந்தயத்தை பொரிய விடுங்கள்.

அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து, தேவையான  உப்பு, அரைத்த தேங்காய் என இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

கடைசியாக கடாயில் உள்ள குழம்பு ஆனது நன்றாக கொதித்தவுடன் இறக்கினால் போதும் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.

வெண்டைக்காய் மசாலா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement